வன்மீகநாதப்பிள்ளை

vaṉmīkanātappiḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் திரிசிரபுரத்தில் பிறந்து வளர்ந்து புது டில்லியில் மத்திய அரசாங்க அலுவலகத்தில் பல்லாண்டு தொண்டு புரிந்து உபகாரச் சம்பளம் பெற்று இது போது டெல்லி கிளாத் மில்லில் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசராக இருந்து கொண்டு சிறந்த முறையில் வாழ்ந்து வருபவர். பி.ஏ. பட்டமும், ராவ்சாகிப் பட்டமும் பெற்றவர். ஜி. வி. பிள்ளை என்றதும் புதுடெல்லியில் இவரை அறியாதவர் இலர். தமிழ் மொழியில் நல்லறிவு படைத்தவர். டில்லியில் ஓய்ந்த நேரங்களில் தமிழ் நூல்களைப் பாடஞ் சொல்லி வருபவ்ர். தென்னாட்டிலிருந்து டெல்லிக்குச்செல்லும் தமிழர்கட்கு வேண்டிய அளவுக்கு உபசாரம் செய்து அனுப்புபவர். பூசைக்குரிய பாடல்கள் அடங்கிய நூலைப் புற்றன் என்ற பெயரால் வெளியிட்டவர். பல கட்டுரைகளை எழுதியும் வெளியிட்டுள்ளார். அவை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இவர் மாணிக்கவாசகரைப் பற்றியும் திருவாககத்தைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் எழுதியுள்ள கட்டுரைகள் சிறப்புவகையில் குறிப்பிடத்தக்கவை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 650)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhe9uey5/

தமிழ்
“வன்மீகநாதப்பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhe9uey5/
APA
Oliyon Research. (2026). வன்மீகநாதப்பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fhe9uey5/
MLA
"வன்மீகநாதப்பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhe9uey5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment