இலக்கமுறை படப்பிடிப்புக் கருவி

ilakkamuṟai paṭappiṭippuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங்களைப் பதிவுசெய்யும் கருவி. இக்கருவியில் மின் ஏற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக்கருவியின் மூடியைத் திறக்கும் போது, லென்ஸ் வழியாக பட உருவத்தை சிசிடி உள் வாங்குகிறது. பிறகு அப்பட உருவம், படக் கருவியின் உள்ளே இருக்கும் நிலை நினைவகம் அல்லது நிலைவட்டில் சேமிக்கப்படுகிறது. படக்கருவியுடன் தரப்படும் மென்பொருளின் உதவியுடன் பதியப்பட்ட படஉருவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வருடுபொறி மற்றும் அது போன்ற உள்ளீட்டுக் கருவிகள் மூலம் கணினியில் கையாளும் படங்களைப் போன்றே படப்பிடிப்புக் கருவி மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்ட படத்தையும் நாம் விரும்பியவாறு திருத்தி, சீரமைத்து வைத்துக் கொள்ளலாம் — digital camera
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண்ணுருப் படமாக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fg7j65j3/

தமிழ்
“இலக்கமுறை படப்பிடிப்புக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fg7j65j3/
APA
Oliyon Research. (2026). இலக்கமுறை படப்பிடிப்புக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fg7j65j3/
MLA
"இலக்கமுறை படப்பிடிப்புக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fg7j65j3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment