சுல்லர்—கிறிஸ்டியன் நோய்
cullar—kiṟisṭiyaṉ nōy
இணைப்புத் திசுவிலுள்ள செல் பெருக்கம் காணப் படும் பல்வேறு நோய்களில் ஒன்று ஹாண்ட் சுல்லர் கிறிஸ்டியன் நோய் (Hand-Schuller Christian disease) ஆகும்.
இணைப்புத் திசுவிலுள்ள செல் பெருக்கம் காணப் படும் பல்வேறு நோய்களில் ஒன்று ஹாண்ட் சுல்லர் கிறிஸ்டியன் நோய் (Hand-Schuller Christian disease) ஆகும். இணைப்புத் திசுச் செல் பெருக்கம் காணப் பட்டாலும், இது புற்று நோயன்று. மாறாக, ஏதோ இனம் தெரியாத் தூண்டலால் இப்பெருக்கம் உடலின் பல்வேறு பகுதிகளில் இயோசினோஃபில் புது வளர் சிறுமணிக் கட்டிகளை (multifocal eosinophilic granuloma) உண்டாக்கும்.
இந்நோய் 5 வயதுக்கும் கீழ் உள்ளோரிடம் எலும்பில் நலிவுடன் தோன்றி ஆறு மாதங்களுக்குள் பல்வேறு எலும்புகளைப் பாதிக்கும் அல்லது முதன் முறையாகப் பார்க்கும் போதே, பல்வேறு தட்டை எலும்புப் பாதிப்புடன் நோயாளி காணப்படுவர். மிகு தளர்ச்சி, நலிவு, பசியின்மை, காய்ச்சல், அழுகை, எரிச்சல் போன்றவற்றுடன் காணப்படுவர். குழந்தைகளில் மாஸ்டாய்டு அழற்சி, உட்செவி அழற்சி, சுவாசப் பாதைத் தொற்று முதலியவையும். காணப் படும். தோல் அழற்சியும் தோன்றும்.
25—50%, நோயாளிகளில் நிண நீர்க் கணுக்கள் வீர்த்து, ஈரல் மற்றும் மண்ணீரல் வீங்கிக் காணப் படும். இந்நோயில் மூன்று முக்கிய குறிகளாகிய கபால எலும்புப் பாதிப்பு, விழிப் பிதுக்கம், சர்க்கரை நோயற்ற நீரழிவு நோய் ஆகியவை 25% நோயாளிகளில் காணப்படுவதுடன், ஒன்று மட்டும் 50% நோயாளிகளில் உறுதியாகக் காணப்படும். நுரையீரல் பாதிப்பால், நிமோனியாவும் காணப்படும். ஆனால், குருதி பாதிக்கப்படுவதில்லை.
நோயை ஆய்வு மூலம் கண்டுபிடிக்கலாம். 50% நோயாளிகளில் இந்நோய் மாறப் பல ஆண்டுகளாகும். வின்பிளாஸ்டின், பிரட்னிசோன், சைக்ளோஃபாஸ்பமைடு முதலிய வேதி மருந்துகளைக் குறைந்த அளவில் கொடுக்கலாம், நலமடைந்த நோயாளிகளிடம் நீரிழிவும், எலும்புப் பாதிப்பும் மாறுவதில்லை. —மா. ஜெ. ஃபிரடெரிக் ஜோசப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 526)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ffguqaxt/
தமிழ்“சுல்லர்—கிறிஸ்டியன் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ffguqaxt/APA
Oliyon Research. (2026). சுல்லர்—கிறிஸ்டியன் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ffguqaxt/MLA
"சுல்லர்—கிறிஸ்டியன் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ffguqaxt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment