இராமதாசு, குரு
irāmatācu, kuru
என்பார் சீக்கிய சமயத்தின் நான்காம் குருவாவர்.
என்பார் சீக்கிய சமயத்தின் நான்காம் குருவாவர். இவர் கி.பி. 1534–ஆம் ஆண்டில் இன்றைய பாகிசுத்தானிலுள்ள இலாகூர் என்னும் ஊரில் சூதி மரபில் பிறந்தார். சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் குரு இராமதாசர் எழுதிய 679 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவருடைய அரும்பணியால் சீக்கியர் வலுப்பெற்றனர். பஞ்சாபு மாநிலத்திலுள்ள அமிருதசரசு என்னும் நகரில் பொற்கோயிலைக் கட்டியவரும் இவரே. இந்நகரம் சீக்கியர்களால் புனித நகரமாகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குருவான அமர்தாசரின் மருமகன். இராமதாசு மொகலாயர் பேரரசர் அக்பரிடம் நல்லுறவினைக் கொண்டிருந்தமையால், அமிருதசரசில் 500 பிகா நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். இராமதாசு இராமதாசப்புரம் என்னும் புதிய நகரமொன்றையும் கட்டினார். அமிருதசரசிலும் சந்தோக்சரிலும் இரு குளங்களை வெட்டும் பணியைத் தொடங்கினார். இத்தகைய சமயப் பணிகளுக்காகப் பொருள் திரட்ட இராமதாசு தம் பணியாளர்களை அனைத்து இடங்களுக்கும் அனுப்பினார். இவர் காலத்தில் சீக்கிய சமயம் பொதுமக்களால் பெரிதும் போற்றப்பட்டது. குரு இராமதாசு கி.பி. 1581–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மறைவுக்குப் பின், இவர் மூன்றாம் மகன் குரு அர்ச்சுனதேவர், ஐந்தாம் குருவாகத் தம் 18 ஆம் வயதில் பொறுப்பேற்றார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 122)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/femkrrpq/
தமிழ்“இராமதாசு, குரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/femkrrpq/APA
Oliyon Research. (2026). இராமதாசு, குரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/femkrrpq/MLA
"இராமதாசு, குரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/femkrrpq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment