ஒரு வளிமத்தின் பருமன், வெப்ப நிலைத் தொடர்பை விளக்குவது சார்லஸ் விதி ஆகும். 1787 ஆம் ஆண்டு சார்லஸ் என்பாராலும், 1808 ஆம் ஆண்டு கேலூசக் என்பாராலும் இது தனித்தனியே அறியப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அழுத்தம் உள்ள வளிமத்தின் செல்சியஸ் வெப்ப நிலையைப் படிப்படியாக மாற்றும் போது, அதன் பருமன் நேர் கோட்டுத் தொடர்பில் மாறி வருவதைக் கண்டனர். பல்வேறு அழுத்தத்தில் உள்ள அனைத்து வளிமங்களும், பருமன் வெப்ப நிலை வரைபடத்தில், பூஜ்ய செல்சியஸ் வெப்ப நிலையில் பெற்றுள்ள பருமனின் நேர் கோட்டை நீட்டி விட்டால் (extrapolated), வளிமத்தின் பூஜ்ய பருமன் (V=O) ஒரே வெப்ப நிலையில் (-273°C) முடிவடையும். ஒவ்வோர் ஆய்விலும் இவ்வரை கோட்டின் சாய்வு (slope), V/273 என்பதற்குச் சமமாக இருக்கும். இங்கு V என்பது O°Cஇல் எடுத்துக் கொள்ளப்பட்ட வளிமம் பெற்றுள்ள பருமன். கவனிப்பின் மூலமாகவே தனி வெப்ப நிலை (absolute temperature scale) அல்லது கெல்வின் வெப்ப நிலை அலகு வருவிக்கப்பட்டது. -273°C என்ற வெப்ப நிலையில்தான், ஒரு வளிமத்தின் பருமன் பூஜ்யமாக உள்ளது. இவ்வெப்ப நிலையே கெல்வின் வெப்ப அலகில் பூஜ்யமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு முடிவுகளின் மூலமாக ஓர் அமைப்பின் தனி வெப்ப நிலைச் சமன்பாடு என்பது, 1°C வெப்பநிலை மாற்றத்திற்கு, ஆகவே t°C என்ற வளிமத்தின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்கான சமன்பாடானது, இங்கு,குறிப்பிட்ட வளிமத்திற்கு V ஒரு மாறிலி ஆகும். எனவே, இச்சமன்பாடே சார்லஸ் விதியாகும். மாறா அழுத்தத்தில் கொடுக்கப்பட்ட வளிமத்தின் பருமன், அதன் தனி வெப்ப நிலையுடன் நேர் விகித தொடர்பைப் பெற்றுள்ளது என்பதே சார்லஸ் விதி ஆகும். V/T என்பது மாறிலி. ஒரு வளிமத்தின் பரும விரிவு எண்ணின் அடிப்படையிலும் சார்லசின் விதி குறிப்பிடப்படுகிறது. ஒரு வளிமத்தின் பரும விரிவு எண் α எனலாம். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வளிமத்தை மாறாத அழுத்தத்தில் சூடாக்க, அதன் வெப்ப நிலை ஒரு செல்சியஸ் பாகை உயரும் போது, அதன் பருமன், பூஜ்ய செல்சியஸ் பாகையில் இருந்த அதன் தொடக்கப் பருமனைப் போல α மடங்கு அதிகரிக்கிறது. t வெப்ப நிலையில் வளிமத்தின் பருமன் V. பூஜ்ய வெப்ப நிலையில் அதன் பருமன் V எனில் α = எனவே, V - V = αVt இதே போல ஒரு வளிமத்தின் அழுத்த விரிவு எண்ணின் அடிப்படையிலும் சார்லஸின் விதியைக் கூற முடியும். ஒரு வளிமத்தின் அழுத்த விரிவு எண் α எனலாம். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வளிமத்தை அதன் பருமன மாறாத வகையில் சூடாக்கி, அதன் வெப்ப நிலை ஒரு செல்சியஸ் பாகை உயரும் போது, அதன் அழுத்தம், பூஜ்ய செல்சியஸ் பாகையில் இருந்து, அதன் தொடக்க அழுத்தத்தைப் போல α மடங்கு அதிகரிக்கும். t வெப்ப நிலையில் வளிமத்தின் அழுத்தம் P, பூஜ்ய வெப்ப நிலையில் அதன் அழுத்தம் P. எனில் α = அல்லது P - P = αPt —பி.ஈ.எம். லியாகத் அலி கான் —கே. என். ராமச்சந்திரன்