அலகாபாத்
alakāpāt
அலகாபாத் இந்தியாவின் புண்ணியத் தலங்களில் ஒன்று.
அலகாபாத் இந்தியாவின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அலகாபாத் என்பதன் பொருள் கடவுளின் நகரம் என்பதாம். அது அக்பர் இட்ட பெயர். அதற்குப் பிரயாகை என்பது பழைய பெயர். அது கங்கையும் யமுனையும் கூடுமிடத்தில் கி. மு. 200-ல் அமைக்கப் பெற்றது. அங்கு அக்பர் கட்டிய கோட்டையும் அரண்மனையும், ஜம்மா மசூதியும் புகழ் வாய்ந்தவை. கோட்டையினுள் வாயிலருகே உள்ள அசோகர் தூண் 35 அடி உயரம். அதில் அசோகர் கட்டளைகளும். சமுத்திரகுப்தருடைய வெற்றிகளும் பொறிக்கப்பட்டுள. சர்க்கரை, பருத்தி வியாபாரம் மிகுதி. ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேள விழாவுக்கு இலட்சம் மக்கள் வந்து, நதிகள் கூடுமிடத்தில் நீராடுவார்கள். இந்நகரம் உத்தரப் பிரதேச இராச்சியத்தில் உள்ளது. பல்கலைக் கழகமும் உயர் நீதிமன்ற மும் உள. மக்: 3,22,295 (1951).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 249)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fba786gn/
தமிழ்“அலகாபாத்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fba786gn/APA
Oliyon Research. (2026). அலகாபாத். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fba786gn/MLA
"அலகாபாத்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fba786gn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment