சுழற்சி, அச்சு
cuḻaṟci, accu
சமச்சீர் அச்சைப் பற்றிச் சுழலும் பம்பர வடிவிலான சுழல் காட்டி (top gyroscope) படம் 1இல் உள்ளவாறு ஈர்ப்புத் திருக்கத்திற்கு (gravitational torque) உள்ளாகிறது.
சமச்சீர் அச்சைப் பற்றிச் சுழலும் பம்பர வடிவிலான சுழல் காட்டி (top gyroscope) படம் 1இல் உள்ளவாறு ஈர்ப்புத் திருக்கத்திற்கு (gravitational torque) உள்ளாகிறது. பம்பரத்தின் அச்சையும், அதன் செங்குத்தையும் இணைக்கும் தளம் செங்குத்து அச்சைப் (vertical axis) பற்றிச் சுழல்கிறது. பம்பரத்தின் இவ்வியக்கம் அச்சுச் சுழற்சி (precession) எனப்படுகிறது.
தகுந்த தொடக்க நிலைகளைத் (initial condition) தேர்ந்தெடுப்பதன் மூலம், அச்சுச் சுழற்சியின் கோணத் திசை வேகம் (angular velocity) மாறிலியாகும். தொடக்க நிலைகள் சரி வர அமையாதிருப்பின், பம்பரத்தின் அச்சு மேலும், கீழுமாகவோ, பக்கவாட்டிலோ குதித்தாடத் தொடங்கும். எனவே, அதன் பாதை படம் 2இல் காட்டியுள்ளவாறு அவை சுழற்சியாக அமையும். இத்தகைய அலைவு இயக்கம் சீரான அச்சுச் சுழற்சியின் மீது ஓஒருங்கிணைக்கப்படும். இதற்குச் சிற்றூசலாட்டம் (nutation) என்று பெயர்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அதன் கோணத் திசை வேகத்தைக் கணக்கில் கொள்வதால், அச்சுச் சுழற்சிக்கான இயற்காரணங்களை எளிதில் அறிந்து கொள்ள இயலும். ஈர்ப்பினால் ஏற்படும் திருக்கம் Nஇன் அளவு பின் வரும் சமன்பாட்டினால் கணக்கிடப்படும்.
M என்பது பம்பரத்தின் நிறை; l என்பது நிறை மையத்திற்கும் (centre of mass) பம்பரத்தைத் தாங்கும் புள்ளிக்குமிடையேயுள்ள தொலைவு. திருக்கத்தின் திசை பம்பரத்தின் அச்சிற்கும், அதன் செங்குத்துக்கும் இடையேயுள்ள தளத்திற்குச் செங்குத்தாக அமையும். தளம் பம்பரத்தின் அச்சையும், அதன் செங்குத்தையும் கொண்டிருப்பின், அச்சுச் சுழற்சி Δt நேரத்தில் Δφ கோணத்தில் இருக்கும்.
J என்பது பம்பரத்தின் தற்சுழற்சிக் கோண உந்தம் (spin angular momentum) எனக் கொண்டால், Δt நேரத்தில் ஏற்படும் கோண உந்த மாறுபாட்டின் அளவு J sinθ Δφ ஆகும். மொத்தக் கோண உந்த இயக்கச் சமன்பாட்டிலிருந்து, திருக்கம் கோண உந்தத்தின் விகித மாறுபாட்டிற்குச் சமமாக உள்ளது என்பதை அறியலாம்.
எனவே, block_center|larger|N = J sin \frac{\Delta \phi}{\Delta t} = Mgl sin \theta(2) அதைப் போன்று, அச்சுச் சுழற்சியின் கோணத் திசை வேகத்தை ω எனக் கொண்டால், block_center|larger|\omega = \frac{\Delta \phi}{\Delta t} = \frac{Mgl}{J}(3) அச்சுச் சுழற்சி ஈர்ப்புப் புலத்தில் உள்ள பம்பரங்களைப் போன்று ஒத்த இயக்கங்களை (analogous Motion) உடைய அமைப்புகளுக்கும் ஏற்புடையது. எனவே, கோண உந்தமான J காந்தத் திருப்புத் திறன் (magnetic moment) μ உடன் தொடர்புடையது. காந்தப்புலம் H அளிப்பதால், அச்சுக் சுழற்சி ஏற்படுவது லார்மர் அச்சுச் சுழற்சி (Larmor precession) எனப்படும். இந்நிகழ்வில் திருக்கம் μHsinθ ஆகும். அதாவது சமன்பாடு (2) இல் mgl க்குப் பதிலாக μH பிரதியிடப்படுகிறது. சமன்பாடு (3) இலிருந்து லார்மர் அச்சுச் சுழற்சியின் அதிர்வெண் block_center|larger|\omega L = \frac{\mu H}{J} ஆகும். —ஜா. சுதாகர்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 576)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fan3rw6z/
தமிழ்“சுழற்சி, அச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fan3rw6z/APA
Oliyon Research. (2026). சுழற்சி, அச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fan3rw6z/MLA
"சுழற்சி, அச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fan3rw6z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment