இந்தியாவின் கல்வியமைச்சராயிருந்தவர்; தலைசிறந்த கல்வியாளர். இவர் 1907–ஆம் ஆண்டு வங்காளத்தில் பிறந்தார். கல்கத்தாவிலும் பின்னர் இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டிலும் கல்விகற்றுத் தேர்ந்த இவர் பண்டித சவகர்லால் நேருவின் மத்திய அமைச்சரவையில் 1957 முதல் 1965 வரை கல்வி அமைச்சராக இருந்தார். பின்னர், பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவராய் இருந்தார். உமாயூன் கபீர் (Humayun Kabir) காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேறி, பங்களாக் காங்கிரசு (Bangla Congress) என்னும் தனியானதொரு அரசியற் கட்சியை அமைத்தார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று ‘தமது பாரம்பரியம்’ (Our Heritage) என்னும் ஆங்கில நூலாகும். இவர் 1969–ஆம் ஆண்டு காலமானார். மு.அ.