உதயேந்திரம் செப்பேடுகள்
utayēntiram ceppēṭukaḷ
முதலாம் நந்திவர்மன் காலத்தில் வெளியிடப்பெற்றவை; வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் உள்ள உதயேந்திரம் என்ற சிற்றூரில் கண்டுபிடிக்கப்பட்டவை.
முதலாம் நந்திவர்மன் காலத்தில் வெளியிடப்பெற்றவை; வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் உள்ள உதயேந்திரம் என்ற சிற்றூரில் கண்டுபிடிக்கப்பட்டவை.
இவை மூன்று ஏடுகளைக் கொண்டவை. இவற்றின் முதல் ஏட்டிலும் கடைசி ஏட்டிலும் உட்புறத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதல் ஏட்டின் முன்புறத்தில் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் தமிழில் பொறிக்கப்பட்ட புறக்குறிப்பு (Endorsement) இடம் பெற்றுள்ளது. இச்செப்பேடு முழுவதும் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. முதலாம் நந்திவர்ம பல்லவன் தன் முதலாம் ஆட்சியாண்டில் கூலசர்மான் என்பானுக்கு அடையாற்று நாட்டில் உள்ள காஞ்சிவாயில் என்னும் சிற்றூரையும், காட்டு நிலம் நான்கு பட்டிகளையும் பிரமதேயமாக வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கிறது. முதலாம் நந்திவர்மனால் வைகாசி மாதம் வளர்பிறைப் பஞ்சமியில் காஞ்சிபுரத்திலிருந்து இச்செப்பேடு வழங்கப்பட்டது.
இச்செப்பேடுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள போதிலும் வடமொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. வடமொழியில் உள்ள இச்செப்பேடுகள் ஆந்திரப்பிரதேசத்தில் வழக்கில் இருந்த தெலுங்கு–கன்னட எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் காணப்படும் எழுத்துகள் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் எழுத்தமைதியின்றி, பத்தாம் நூற்றாண்டின் எழுந்தமைதியைக் கொண்டுள்ளன. இதனால் இச்செப்பேடுகள் மூலப்படியிலிருந்து படியெடுக்கப்பட்டன என்பது தெளிவு.
இச்செப்பேடுகள் நந்திவர்ம பல்லவனின் சிறந்த பண்புகளை விரித்துரைக்கின்றன. இவன் பரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவன் என்றும், பாகவதர்களில் சிறந்தவன் என்றும். கலியுகப் பாவத்தை அடக்கி அறத்தை உயர்த்தி நிலைநிறுத்துவதில் ஆர்வம் கொண்டவன் என்றும், பல போர்களில் வெற்றி பெற்றவன் என்றும், பக்திமான் என்றும் இச்செப்பேடுகள் புகழ்ந்து பேசுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 904)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9h48ng4/
தமிழ்“உதயேந்திரம் செப்பேடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f9h48ng4/APA
Oliyon Research. (2026). உதயேந்திரம் செப்பேடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f9h48ng4/MLA
"உதயேந்திரம் செப்பேடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f9h48ng4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment