இலாகிசு
ilākicu
விவிலிய நூலில் கூறப்பட்டுள்ள நகரம்.
விவிலிய நூலில் கூறப்பட்டுள்ள நகரம். இது பாலசுத்தீனத்தில் யூதேய (Judaean) மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதாக விவிலிய நூல் கூறுகிறது. தெல்–எல்–எசி (Tell–el–Hesi) என்னும் இக்கால நகரமே அக்கால இலாகிசு (Lachish) நகரம் எனச் சர். பிளிண்டர்சு பெட்ரி (Sir Plinders Petrie) என்பவரும், பிரடரிக்கு செ. பிளிசு (Frederick J. Blis) என்பவரும் கருதுகின்றனர். வில்லியம் எப். ஆல்பிரைட்டு (William F. Albright) என்பவர் 1929–இல் தெல்–எட்–துவீர் (Tell–ed–Duweir) என்னும் நகரமே விவிலிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இலாகிசு நகரமாகும் என்று கூறினார். தெல் எட்–துவீர் இசுரேலில் செருசலத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனை உறுதி செய்யும் முசுத்தான் தெல்–எட்–துவீரில் அகழாய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. வெல்கம் மார்சுட்டன் (Welcome Marston) என்பவர் சான் எல். இசுட்டார்க்கி (John L. Starkey) என்பவரின் மேற்பார்வையில் அகழாய்வினை இப்பகுதியில் நடத்தினார்.
அகழாய்வில் பல அரிய பழஞ்சின்னங்கள் கிடைத்தன. இப்பகுதியில் முதன்முதலில் குகைவாழ்மக்கள் வாழ்ந்துள்ளனர். கி.மு. 27–ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 24–ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் இலாகிசில் வாழ்ந்தனர். அகழாய்வில் கி.மு. 1700–ஆம் ஆண்டைச் சார்ந்த செவ்வக வடிவிலமைந்த மண் கோட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோட்டையை ஐக்சாசு (Hyksos) என்னும் நாடோடி மக்கள் கட்டினர். யோசுவா (Joshua) என்னும் அரசர் இந்நகரைக் கைப்பற்றி யூதா (Judah) என்பவரிடம் ஒப்படைத்தார். இரெகுபோம் (Rehoboam) என்னும் அரசர் இந்நகரைச் சுற்றி இரண்டு மதிற்சுவர்களைக் கொண்ட அரண்களைக் கட்டினார். அமேசையா (Amaziah) என்னும் மன்னர் இந்நகரில் அடைக்கலம் அடைந்தபொழுது கொல்லப்பட்டார்.
இந்நகரின் கோட்டை வாயிற் பகுதியில் அகழாய்வு நடத்தியபோது, 1500 மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை போரினால் இறந்த வீரர்களுடையன எனக் கருதப்படுகின்றன. சென்னா செரிபு (கி.மு. 704–681, Sennacherib) என்ற அரசரின் நினிவேன் (Nineven) அரண்மனையில் காணப்படும் புடைப்பகழ்வுச் செதுக்குச் சிற்பங்கள் சென்னாசெரிபின் இலாகிசு நகரத் தாக்குதலையும் அதைக் கைப்பற்றியதையும் குறிப்பிடுகின்றன. தொல்லியல் அறிஞர்கள் சென்னாசெரிபு இலாகிசு நகரைத் தாக்கிய பொழுது அவரை எதிர்த்த நகரக் காவல் வீரர்களின் எலும்புக்கூடுகளே இவை எனக் கூறுகின்றனர். இரண்டாம் இராமாசெசு மன்னரின் வண்டு வடிவத் தாயத்து ஒன்றும், எழுத்துகள் பொறிக்கப்பட்ட கிண்ணம் ஒன்றும் அகழாய்வில் கிட்டின. இவ்வெழுத்துகளின் தன்மையைக் கொண்டு இக்கிண்ணம் மெர்னெப்டா (Merneptah, கி.மு. 1223–1211) என்னும் அரசரின் 4–ஆம் ஆட்சி ஆண்டைச் சார்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் நெபுகாத்நேசர் இந்நகரத்தை கி.மு. 598–இல் எரித்து அழித்தார். புதுப்பிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கி.மு. 587–இல் தரைமட்டமாக்கினார்.
இசுடார்க்கி என்னும் அறிஞர் 1935–இல் மையினால் எழுத்துகள் எழுதப்பட்ட 18 மட்பாண்டங்களைக் கோட்டை வாயிலில் அமைந்துள்ள காவலறையில் அகழ்ந்தெடுத்தார். 1938–ஆம் ஆண்டில் மேலும் எழுத்துகள் உள்ள மட்பாண்டங்கள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஒசையா (Hoshaiah) என்னும் புறக்காவல் அதிகாரி இலாகிசுவில் இருந்த இயோசு (Yaosh) என்னும் இராணுவ அதிகாரிக்கு எழுத்துகள் கொண்ட மட்பாண்டங்களைக் கடிதங்களாக அனுப்பியுள்ளார். இவ்வெழுத்துகள் உள்ள மட்பாண்டக் கடிதங்கள் கி.மு. 889–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டன. இவற்றுள் ஆறு மட்பாண்டங்கள் உடையாத வண்ணம் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் பொறிக்கப்பெற்றுள்ள சொற்தொடர்கள் விவிலிய நூலின் சொற்றொடர்களையும் சில பெயர்களையும் கொண்டுள்ளன. தொல்லெழுத்தியல் முறைப்படி இவ்வெழுத்து மட்பாண்டங்கள் எரேமியா (Jeremiah) என்னும் அரசர் காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இந்நகரம் அழிவுக்குப்பின் மீண்டும் புதுபிக்கப்படவில்லை. அழிந்துபட்ட பகுதியில் பின்னர்ப் பாரசீக மாவட்ட ஆளுநர் வாழும் கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டை கி.மு. 6–ஆம் நூற்றாண்டிலிருந்து 4-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சார்ந்தது.
1932–இல் இந்நகரில் தொடங்கப்பட்ட அகழாய்வு 1938–இல் சே.எல். இசுடார்க்கி கொலை செய்யப்பட்டதால் கைவிடப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 355)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f6z6nmeq/
தமிழ்“இலாகிசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f6z6nmeq/APA
Oliyon Research. (2026). இலாகிசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f6z6nmeq/MLA
"இலாகிசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f6z6nmeq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment