தாங்கி

tāṅki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதாரம்,பூண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 214)
2.
சுமந்து, பொறுத்து, (குறள் 733); தடுத்து, (குறள் 767).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 142)
3.
நினைவறை, இடைநிலைநினை வகம் : பல்வேறுபட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப்படுத் தவோ பயன்படுகின்ற தற்கா லிக இருப்பிடப் பகுதி. மெது வாக உள்ளீடு செய்கின்ற சாதனமான முகப்பு விசைப் பலகையுடன் அதி வேகமாக இயங்குகின்ற கணினியின் முதன் மைப்பகுதியுடனும் இணைப்பதற் குப் பயன்படுத்தலாம். — buffer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இடையகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 107)
4.
சமிக்ஞை அனுப்பப்படுவதற்கு ஒரு எல்லை அல்லது உறையாக அமைந்து ஏ.சி. மின்சாரம் இயங்குவது. ஒரு கம்பி அல்லது குழாய் மூலம் ஒரே நேரத்தில் பல சமிக்ஞைகளை இது கொண்டு செல்ல முடியும். சான்றாக ஒரே தாங்கியில் குரல், தகவல் அல்லது ஒளிக்காட்சி சமிக்ஞைகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஏனென்றால், ஒவ்வொன்றும் மாறுபட்ட இடைவெளிகளில் செல்பவை — carrier
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 121)
5.
தற்காலிகக் காம்பு போன்ற உறுப்பு. கருவுறுதலுக்குப் பின் ஊட்டமுள்ள முளை சூழ்தசையில் கருவைத் தாங்குவது. உறையில் விதையுள்ள தாவரங்கள், பெரணிகள் (செலாஜினெல்லா) உறையில் விதையில்லாத் தாவரங்கள் (சளம் பனை) ஆகியவற்றில் காணப்படுவது — suspensor
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 424)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3dewtwb/

தமிழ்
“தாங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3dewtwb/
APA
Oliyon Research. (2026). தாங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3dewtwb/
MLA
"தாங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3dewtwb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment