செல்லோபயோஸ்
cellōpayōs
இது ஒரு டைசாக்கரைடு. இதன் வேதிப் பெயர் 4–O–β–D-குளூக்கோபைரனோசில் –D–குளூக்கோஸ்.
இது ஒரு டைசாக்கரைடு. இதன் வேதிப் பெயர் 4–O–β–D-குளூக்கோபைரனோசில் –D–குளூக்கோஸ். பொதுவாக, செல்லோபயோஸ் (cellobiose) செல்லுலோசிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இதன் அமைப்பு வருமாறு:
இதில் β–D–குளூக்கோபைரனோசில் தொகுதிகள், 1→4 கிளைக்கோசைடு பிணைப்பில், D–குளூக்கோசுடன் இணைக்கப் பட்டுள்ளன. இயற்கையில் அரிதாக இந்தச் சர்க்கரை காணப் படுகிறது. பைன் மர ஊசிகளில் செல்லோபயோஸ் உள்ளமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. —த. தெய்வீகன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 869)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f2ge3fg9/
தமிழ்“செல்லோபயோஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f2ge3fg9/APA
Oliyon Research. (2026). செல்லோபயோஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f2ge3fg9/MLA
"செல்லோபயோஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f2ge3fg9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment