ஆங்கோர்
āṅkōr
ஆசியாவில் கம்போடியா நாட்டின் பழைய தலைநகரம்; இப்பொழுது சிதைந்து கிடக்கிறது.
ஆசியாவில் கம்போடியா நாட்டின் பழைய தலைநகரம்; இப்பொழுது சிதைந்து கிடக்கிறது. இதைச் சூழ்ந்து உயரமான சுவர்கள் உள்ளன. இதன் பரப்பு ஏறக்குறைய இரண்டு சதுர மைல். இதற்கு ஐந்து வாயில்கள் உள்ளன. இதிலுள்ள அரண்மனைகள் தென்ஹா என்னும்கம்போடியாசுதந்திரம் பெற்றஆறாம் நூற்றாண்டில் இந்துச் சிற்ப முறையைத் தழுவிக் கட்டப் பெற்றவை. இங்கு வாழ்ந்த மக்கள் கெமர் (Khmer) நாகரிகத்தினர் எனப்பெறுவர். தலைநகரத்தை ஆங்கோர்தோம் என்றும், அதன் தெற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள பௌத்தக் கோயிலை ஆங்கோர்வாட் என்றும் கூறுவர். இந்த நகரத்தைத் தாய்லாந்து மன்னனுடைய சேனைகள் 1431-ல் அழித்தன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 379)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/etazd4v4/
தமிழ்“ஆங்கோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/etazd4v4/APA
Oliyon Research. (2026). ஆங்கோர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/etazd4v4/MLA
"ஆங்கோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/etazd4v4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment