அட்டன்சேம்சு
aṭṭaṉcēmcu
அட்டன்சேம்சு என்பவர் நில உட்கூற்றியல் நூலாசிரியரும் இயற்பியல் அறிவியலாரும் ஆவார்.
அட்டன்சேம்சு என்பவர் நில உட்கூற்றியல் நூலாசிரியரும் இயற்பியல் அறிவியலாரும் ஆவார். இவர் இக்கால மண்ணூல் ஆய்வுக் குழுவிற்கு அடிகோலியவர் என்று கருதப்படுகிறார். ஓருருப் படுத்துதவிய கோட்பாடு (Uniformitarianism) என்பது இவர் அறிவியல் உலகுக்குக் கொடுத்த நன்கொடையாகும். அதன்படி பண்டைக்காலத்தில் பூமியை உருவாக்க உறுதுணையான மண்ணியல்புகளும் இக்காலத்தில் செயல்படும் கூறுகளும் ஒன்றானவையே என்பதாகும்.
அட்டன் கி.பி. 1726–ஆம் ஆண்டு எடின்பரோவில் பிறந்தார். வழக்குரைஞராக வாழ்வைத் தொடங்கி வெற்றிபெற இயலாத நிலையில், எடின்பரோ, பாரிசு, இலெய்டன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்றார். கி.பி. 1749–இல் இலெய்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை (எம்.டி) பட்டம் பெற்றாலும் இவர் மருத்துவராகப் பணி செய்தாரில்லை. பெர்ளிக்கிலிருந்த தம் பண்ணையில் வேளாண்மை செய்ய முற்பட்டார். இவர் ஆய்வு முறைகள் சீரிய பலனளித்தமையால் பதவியிலிருந்து விலகி, எஞ்சிய நாட்களை நில உட்கூற்றியல் ஆய்வுகளில் பயன்படுத்தினார். கி.பி. 1797–ஆம் ஆண்டு அட்டன் சேம்சு (Hutton James) எடின்பரோவில் காலமானார்.
பூமியின் அமைப்புக்கு வெப்பத்தின் பங்கு சீரியதாகும் என்பது இவரது கருத்து. எரிமலைப் பாறையும் கருங்கல் பாறையும் உருகிய திரள்களிலிருந்து உருவானதே பூமி என்று இவர் நம்பினார். ஏனைய அறிவியல் வல்லுநர்களுள் பலர் பூமியின் மீது ஒரு காலத்தில் தண்ணீரே நிறைந்திருந்ததென்றும், நீரின் அடியில் கனிமங்கள் நிலையாகத் தங்கியதாலேயே பாறைகள் அனைத்தும் உருவாயினவென்றும் எண்ணியிருந்தனர். பூமியானது இயற்கைக் கூறுபாடுகளினால் படிப்படியாக மாறியதென்றும், அதே கூறுபாடுகளினால் தொடர்ந்து மாறும் என்றும் இவர் தம் கொள்கையை நிலைநாட்டினார். ஏனைய அறிவியல் வல்லுநர்கள், ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே சமயத்தில் முழுமையாக உருவாகியதென்று நம்பியிருந்தனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 216)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esmj9q9z/
தமிழ்“அட்டன்சேம்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/esmj9q9z/APA
Oliyon Research. (2026). அட்டன்சேம்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esmj9q9z/MLA
"அட்டன்சேம்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/esmj9q9z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment