பின்னொழுக்கு உணவுக் குழல் அழற்சி எனப்படும். நெஞ்சுக் கரிப்பில் (heart burn) உணவுக் குழல் புண்ணாகும் அல்லது இறுக்கமடையலாம். இரைப் பையிலிருந்து பெப்டிக் நீர்ம அமிலம், எதிர்க்களித்துச் சென்று, உணவுக் குழலில் புண்களையும், இறுக்கத்தையும் உண்டாகுகிறது. மீண்டும், மீண்டும் வாந்தி எடுக்கும் போது, நெஞ்சுக் கரிப்பும் நின்று விடுகிறது. உணவுக் குழலிலுள்ள சுருக்குத் தசைகளின் (sphincter) திறன் குறைவால், இந்நிலை உண்டாகிறது. இரைப் பை, உதர விதானத் துளைகள் வழியாக மேல் நோக்கி மார்புக் கூட்டினுள் செல்லும் போது, இந்நிலை உண்டாகிறது. நெஞ்சுக் கரிப்பு எனப் படும் இதய எரிச்சல் இந்நோயின் அறிகுறி. மேலும், வயிற்றின் நீர்மமும், வாயினுள் எதிர்க்களிக்கிறது. கீழ் நோக்கிக் குனிதல், சுமை தூக்குதல், வயிற்று உள்ளழுத்தம் மிகையாதல் ஆகிய இந்நிலைகளில் நோய் உண்டாகிறது. இதனால், விழுங்கலில் கடினம் ஏற்படலாம். மார்பு நடு எலும்பின் (Sternum) பின்பக்கமாகத் தோன்றும் இவ்வலி, இதய வலி போன்று தெரியும். பிதுக்கமடைந்துள்ள பையில் காணப் படும் சிறிய புண்ணால் கூடக் குருதி ஒழுக்கு ஏற்படலாம். உணவுக் குழல் உள் நோக்கி, பேரியம் மாவு விழுங்கல் முறை ஆகியவற்றால், நோய் அறுதியிடல் உறுதியாகிறது. இரைப்பைப் புண்களுக்குக் கொடுக்கப் படும் மருந்துகளுக்கும், உணவும் மருத்துவமாக அமைகின்றன. நோயாளி, தலையணை வைத்து, ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்திருக்க வேண்டும்; தேவையிருந்தால் அறுவை செய்யலாம். —அ. கதிரேசன் துணை நூல். K. Chaudhry, Medicine for Students, Seventh Edition, Jaypee Brothers, New Delhi, 1984.