எல். சி. டி. படப்பெருக்கி
el. ci. ṭi. paṭapperukki
பொருள்கள் · Senses
1.
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி மூலம் பெரிய திரையில் படமாகக் காட்டும் கருவி LCD watch : எல். சி. டி கடிகாரம் : திரவ படிவ காட்சித்திரை கடிகாரம். வரி கட்டுப்பாடு வரையறுப்பது. LDL : எல்டிஎல் : Language Description Language என்பதன் குறும்பெயர். ஒரு மொழியைப் பற்றி விவரிக்கும் பெருமொழி. lead : லீட் : ஒரு மின் சுற்று அம்சத்தின் இணைப்பு. leaded chip carrier : வீட்டு சிப்பு இடை நினைவகம் : நான்கு பக்கங்களிலும் இணைப்புகளைக் கொண்டுள்ள சதுர சில்லு. (டி. ஐ. பியை விட அதிக உ/வெ பாதைகளைத் தருவது). leader : முன்னோடி தலைப்பு : ஒரு சுருணை காந்த நாடா அல்லது காகித நாடாவில் ஆரம்பத்தில் உள்ள நாடாவின் வெற்றுப் பகுதி. lead frame : முக்கியப்படம் : ஒரு ஐ. சி. யில் உள்ள லீடை வைத்துக் கொள்கின்ற லீட் அசெம்பிளி யின் பகுதி. படம் எடுத்த பிறகு அது போய்விடும். leading : முன்பகுதி; வரி இடைவெளி : ஒரு வரி அச்சின் அதிக பட்ச கீழ் அளவுக்கும் அடுத்த வரியின் அதிக பட்ச மேல் அளவுக்கும் இடையில் உள்ள செங்குத்து இடைவெளி leading edge : முன்பக்க விளிம்பு; தலைப்பு முனை : 1. படிப்பியின் அட்டையில் முதலில் நுழையும் துளையிட்ட அட்டையின் விளிம்பு. Trailing edge-க்கு எதிர்ச் சொல். 2. ஒளி நுண்ணாய்வில், படி நிலையில் முதலில் நுழையும் ஆவணம் அல்லது பக்கத்தின் விளிம்பு. 3. தொழில் நுட்பத் தலைமையை உணர்த் தும் அடைமொழிச் சொல். leading zeros : முன்னுள்ள பூஜ்யங்கள். தகவலின் எண் மதிப்பைக் கூட்டாத புலத்தை நிரப்பும் பூஜ்யங்கள். சான்றாக, 0001234 என்ற எண்ணில் உள்ள அனைத்து பூஜ்யங்களும் முன்னுள்ள பூஜ்யங்களாகும். lead ion battery : ஈய அணியின் மின் கலன் : மின்சக்தியைச் சேமித்து வைக்கும் சாதனம். வேதியல் சக்தியை மின்சாரச் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அமில ஊடகத்தில் ஒரு முனையிலிருந்து இன்னொருமுனைக்கு அயனிகள் பாய்கையில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. leadless chip carrier : லீட்லஸ் சிப்பு இடைநினைவகம் : நான்கு பக்கங்களிலும் இணைப்புகள் உள்ள தட்டையான சதுர சிப்பு இருக்கும் இடம். leaf : இலை : மர வரைபடத்தின் முனையப் பகுதி. leaf nodes : இலை முனைகள் : பிள்ளைகள் இல்லாத ஒரு மரத்தில் உள்ள முனைகள். இணையத்துக்குத் தொடர்புள்ள இதனை இணைய மொழியில் சொல் வதானால் இணைப்புகள் இல்லாத ஆவணங்கள் எனலாம். leapfrog test தாண்டும் சோதனை : சேமிப்பு ஊடகம் முழுவதும் தன்னை இரட்டித் துக் கொள்ளும் சேமிப்பகம் கண்டறியும் நிரல். learning curve : கற்கும் வளைவு : ஒரு குறிப்பிட்ட பணியில் தொடரும் பழக்கத்திற்கு அதன் விளைவாக ஏற்படும் திறமை, வேகம், துல்லியம் போன்ற வற்றுக்கும் இடையில் உள்ள உறவைக் காட்டும் வரைபடம். அனுபவ வளைவு என்றும் சில சமயம் கூறப்படும். சுலபமாகக் கற்கும் வளைவு அல்லது'நீண்ட கற்கும் வளைவு' என்று மென் பொருளைப் பயன்படுத்துபவர்கள் பேசுவதுண்டு. learning partner programme : கல்விப் பங்காளர் நிரல்; கல்விப் பங்காளர் நிகழ்ச்சி. தொடர் : தகுதியுள்ள எதிர்ப்புகளுடன் பல போட்டிகளைச்சந்தித்து தன் திறமையை படிப்படியாக மேம்படுத்தும் கணினி நிரல் lease : குத்தகை : கணினி முறைமை ஒன்றைப் பயன் படுத்தும் உரிமையைப் பெறும் வழி. குத்தகை ஒப்பந்தத்துக்கு முதலீடு எதுவும் தேவை இல்லை. வாடகைக்கு கணினி முறைமையை எடுப்பதை விட செலவு குறைவானது. leased line modem : குத்தகை இணைப்பு மோடெம் : தனியார் தொடர்புகளில் பயன்படுத்தும் அதிவேக மோடெம். டயல் செய்யும் இணைப்புகளுக்காக குறைந்த வேகத்தில் இயங்கும் மாற்று ஏற்பாடும் அதனிடம் இருக்கும். leased lines : குத்தகைஇணைப்புகள் : பொதுவான அமைப்பு ஒன்றிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட தகவல் தொடர்பு இணைப்புகள். துவக்கப்படாத இணைப்புகள் மற்றும் பிணைப்பு இணைப்புகள் என்று அழைக்கப்படும். leasing companies : குத்தகை நிறுவனங்கள் : குத்தகைக்கு அளிக்கும் நிறுவனங்கள். கணினிச் சாதனங்களை தயாரிப்பாளர் ஒருவரிடமிருந்து வாங்கி குத்தகைக்கு தருவதை சிறப்பாகக் கையாளும் நிறுவனங்கள். least significant bit : மீக்குறை மதிப்புத்துண்மி : ஒன்று அல்லது மேற்பட்ட பைட்டுகள் கொண்ட ஒர் இரும எண்ணில் குறைந்த மதிப்பு (value) உள்ள துண்மி (பிட்) பொதுவாக வலது ஒரத்தில் உள்ளது. least significant byte (LSB) : சிறும மதிப்புள்ள எண்மிகள் : எழுத்துகள் வரிசையின் தொகுதி ஒன்றில், வலது பக்கத்தில் அதிக தூரத்தில் உள்ளதே குறைந்த முக்கியத்துவம் கொண்டது. least significant character : மீக்குறை மதிப்பு எழுத்து : ஒரு சரத்தில் வலது ஒரத்தில் உள்ள எழுத்து. எல்எஸ்சி (LSC) என்பது தலைப்பெழுத்துக் குறும்பெயர். Least Significant Digit : (LSD) : குறைந்த முக்கியத்துவமுடைய எண் : குறைந்த மதிப்பு அல்லது முக்கியத்துவம் உடைய எண். 58371 என்ற எண்ணில் குறைந்த முக்கியத்துவம் உடைய எண் 1. LED : Light Emitting Diode என்பதன் குறும்பெயர். சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஆல்பா எண் வெளியீட்டு அலகு. குறிப்பிட்ட வோல்டேஜ் உள்ள மின் சாரம் அனுப்பப்பட்டால் ஒளிரக் கூடியது. LED display : எல்இடி திரை, சில கணிப்பான்கள், இலக்கமுறை கடிகாரங்கள் போன்றவற்றில் எண்கள் மற்றும் அகரவரிசை எழுத்துகளைக் காட்டும் சாதனம். led printer : எல்இடி அச்சுப்பொறி : ஒளி உமிழ் இருமுனைய அச்சுப் பொறி என்று பொருள்படும் Light Emitting Diode Printer group தொடரின் சுருக்கச் சொல். எல்இடி, லேசர், எல்சிடி அச்சுப் பொறிகளின் முக்கியமான வேறுபாடு ஒளி மூலம் ஆகும். எல்இடி அச்சுப்பொறிகளில் ஒளி உமிழும் இருமுனையங்களின் (Diodes) கோவை (Array) பயன் படுத்துகின்றன. left . இடது : ஒரு வாக்குவாத சரத்தின் இடது புறத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நீள முள்ள சரத்தை திருப்பி அனுப்புகின்ற பணி. leftarrow : இடது அம்புக் குறி. left justification : இடது ஓரச்சீர்மை : சொல்செயலி, கணினிப் பதிப்பகப் பணிகளில் உரை யைத் தட்டச்சு செய்து, இடப்புற ஒர இடைவெளியை ஒட்டி ஒரு சீராக வரிகளை அமைத்தல். வரிகளின் வலப்புற ஓரங்கள் சீராக இருப்பதில்லை. k•ftjustity : இடப்புறநேர்த்தியாக்கு. left shift : இடம்பெறும் மாற்று : இடதுபுறத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு பதிவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு துண்மியையும் மாற்றச் செய்தல். legacy : மரபுரிமை; மரபுவழி : கொஞ்ச காலத்துக்கு முன்பு நிலவிய ஆவணங்களை அல்லது தரவுகளைப் பற்றியது. ஒரு செயலாக்கத்தில் அல்லது தொழில்நுட்பத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது. இந்த மாற்றத்தின் காரணமாக, பழைய தரவு கோப்புகளைப் புதிய முறை மைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கும். legacy data : மரபுவழித்தரவு : ஒரு நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இன்னொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளும் நிறுவனம், இருக்கும் தரவுவை மரபுரிமையாக தகவலின் முந்தைய உடைமையாளரிடமிருந்து பெறுகிறது. legacy system மரபுவழி முறைமை : ஒரு வணிக நிறு வனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள், கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்கும். புதிய பதிப்புகளை நிறுவும் போது மரபுவழி முறைமைகளுடன் ஒத்திசைவு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். (எ-டு) இருக்கின்ற வணிகப் பரிமாற்ற விற்று வரவு ஏடுகளை, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விரிதாள் மென்பொருள், செல வும் நேரமும் அதிகம் எடுத்துக் கொள்ளும் புதிய வடிவ மாற்றம் எதுவுமின்றி ஏற்றுக் கொள்ளுமா? பெரும்பாலான மரபு வழி முறைமைகள் பெருமுகக் கணினி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் அவை கிளையன்/வழங்கன் கட்டுமானம் மூலம் மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. legend : படக்குறிப்பு : ஒரு வரை கலைப் படத்தின் அடியில் அதனை விளக்கி விவரிக்கும் உரைப்பகுதி. ஒரு வரைபடத்தில் அல்லது இயல் படத்தில் படக்குறிப்பு என்பது வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோரணி அல்லது குறியீடுகளை விளக்குவதாக இருக்கும். Leibniz : லீப்னிஷ் : கோர்டிஃ பிரைடுவான் (1646-1716) ஜெர் மானிய கணித வல்லுநர். கணக்கிடும் எந்திரத்தை 1672 இல் கண்டுபிடித்தார். அந்த எந்திரம் கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகிய வேலைகளைச் செய்யக் கூடியது. வான்-லீப்னிஷ் என்பவர் வடிவமைத்த கணக்கிடல் பொறி. பாஸ்கலின் கணிப்பிபோல கூட்டல், கழித்தல் செய்யவல்லது. கூடுதல் பற்சக்கரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் நேரடியாக பெருக்கல் வேலையையும் செய்யக் கூடியது. Lempel Ziv : லெம்பெல் சிவ் : ஏற்ப்புடை சுருக்கும் நுட்பத்தினைப் பயன்படுத்தும் தரவு சுருக்கும் அல்கோரிதம். கோப்புகளை அவற்றின் உள்ளடக்கத்திற்குப் பங்கமின்றி அளவினைச் சுருக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணிதப் படிமுறைத் தருக்கம். len : லென் : ஒரு சரத்தின் நீளத்தைத் திருப்பி அனுப்பும் கட்டளை. LEN (JUNE) என்ற கட்டளை4 என்ற விடையைத் தரும். length : நீளம் : எழுத்துகளுக்கான எண்மிகள் எண்ணிக்கை அல்லது கணினி சொல் ஒன்றில் உள்ள துண்மிகள். ஒரு மாறும் சொல் பல எழுத்துகளால் ஆனது. ஆனால் சிறப்பு முடிவு எழுத்தைக் கொண்டது. நிலையான சொல் என்பது ஒரே எண்ணுள்ள துண்மிகளால், அல்லது எண்மிகளால் அல்லது ஒவ்வொரு சொல்லிலும் உள்ள எழுத்துகளால் ஆனது. length, block : தொகுப்பு நீளம்; தொகுதி நீளம். Leo : லியோ ; லியோன்ஸ் எண்ணும் இங்கிலாந்து நிறுவனம் உருவாக்கிய லியோனின் மின்னணு அலுவலகம் என்பதன் சுருக்கம். 1947இல் துவக்கிய ஒரு திட்டத்தின்படி அவர்கள் அலுவலகத்தின் எழுத்தர்கள் செய்யும் வேலைகளை கணினி மூலம் செய்ய கணினியை உருவாக்கினார்கள். Leo-III : லியோ-III : அதன் காலத்திற்கு மிகவும் முன்னேறிய வணிக எந்திரமான முதல் தலை முறை கணினி. less than : விடக் குறைவு : குறைவாக, சமமற்ற இரு மதிப்பீடு களுக்கிடையிலான உறவு. குறியீட்டின் முனைப் பகுதி சிறிய எண்ணைச் சுட்டுவதாக இருக்கும். 3 less than 8 StaölpTab 3 எனும் எண் எட்டைவிடக் குறைவானது என்று பொருள். ஒப்பீட்டில் மாற்று வகைப்படுத்துதலைத் தீர்மானிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. less time : குறைந்த காலம். letter : எழுத்து; மடல். letter bomb : கடிதக்குண்டு : பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம். சில வேளைகளில் நச்சுநிரல் (virus) மடலில் மறைந்திருக்கலாம். பெறுபவரின் கணினியில் மறைந்திருந்து தாக்கும் ட்ரோஜான் குதிரை நச்சு நிரலாக இருக்கலாம். சில வேளைகளில் மடலின் செய்தியே மிகப்பெரிதாக இருந்து அஞ்சல் பெட்டியை நிரம்பி வழியச் செய்யலாம். letter quality : அச்சுத் தரம்;அச்சு நேர்த்தி, எழுத்துத் தரம் அச்சிடப்பட்ட படி (பிரதி) ஒன்றின் உயர்தரம் தொடர்பானது. சிறந்த தட்டச்சுப் பொறி ஒன்றில் பெறப்பட்டதுடன் ஒப்பிடக் கூடியது. letter quality printer : எழுத்துத் தரமுள்ள அச்சுப்பொறி ;எழுத்துத் தர அச்சடிப்பி : சாதாரணதாளில் தெளிவான பிசிறற்ற எழுத்துகளை உருவாக்கும் அச்சுப் பொறி. பொதுவான அச்சுப் பொறி ஒன்று டெய்சி வடிவுள்ள சக்கரம் ஒன்றைப் பயன்படுத்து கிறது. அதில் எழுத்துகள் வளையக்கூடிய தண்டுகளின் முனையில் உள்ளன. சக்கரம் உயர்வேகத்தில் சுழலும்பொழுது அச்சிடு முனை பக்கத்தின்மீது நகர்கிறது. சுத்தி ஒன்று பொருத்தமான எழுத்துகளின் மீது அடிக்கிறது. அதன் மூலம் சிறந்த தட்டச்சுப்பொறியில் கிடைப்பதை விட தனித்தனியான நேர்த்தியான எழுத்துகளைக் கொண்ட உரை கிடைக்கிறது. இந்த வகை அச்சடிப்பிகளில் சில டெய்சி சக்கர முறைக்குப் பதிலாக கோல்ப் பந்து அச்சிடும் பொறியமைப்பைப் பயன்படுத்துகின்றன. letter shift : எழுத்து உயர்த்தி : விசைப்பலகை விசை அல்லது விசையினால் உருவாக்கப்படும் குறியீடு. இது அடுத்து வரும் வடிவங்களை மற்றொரு வடிவு உயர்த்தித் தோன்றும் வரை எழுத்துகளாகப் படிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. level : நிலை;படித்தளம்; படி நிலை; படிவம் : ஆதிக்க முறை ஒன்றில் அடிபணியும் அளவு. மரம் ஒன்றின் வேருக்கும் அதன் கணுவுக்கும் இடையே உள்ள இடைவெளி. level, access : அணுகு மட்டம், அணுகுநிலை. level address, zero : பூச்சிய நிலை முகவரி : அடிநிலை முகவரி. lex : லெக்ஸ் : ஒரு மொழிபடிவத்திலிருந்து வேறொரு மொழிக்கு தரவுகளை மாற்றும் தரவு மாற்றல் மென்பொருள். lexical anayIsis : சொல்லாக்க ஆய்வு : ஒரு நிரலாக்கத்தொடர் சொற்றொடரின் பல்வேறு பகுதிகளைத் தொகுப்பி அடையாளம் காணும் செயல்முறை. lexicographic sort : சொல்லாக்க வகைப்படுத்தல் : அகராதியைப்போன்று அகர வரிசையில் வரிசைப்படுத்துதல். அகர வரிசை சொற்களின் மூலம் எண்கள் அமைக்கப்படும். lexicon : பேரகராதி : பேரகரமுதலி : எல்லாச் சொற்களுக்கும் விளக்கமளிக்கும் நூல். LF : எல்எஃப் : Line Feed என்பதன் குறும்பெயர். LHA : எல்எச். ஏ. : விரைவான, திறன்மிக்க இலவசமாகக் கிடைக்கும் கோப்பு சுருக்கும் பயன்பாடு. librarian : நூலகர் : 1. தொழில் நுணுக்க ஆவணங்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்; நிரல் தொகுப்புகளை உருவாக்குவோர்; இயக்குவோர் மற்றும் பிற ஊழியர்கள் பயன்படுத்தும் விளக்கத் தொகுப்புகளைப் பராமரிப்பவர். 2. எல்லா கணினிக் கோப்புகள் அதாவது தகட்டுக் கற்றைகள் மின்காந்த நாடாக்களை பாதுகாப்பாக வைத்திருப்பவர். காப்பாளர், கோப்பு நூலகர், மென் பொருள் நூலகர், நாடா நூலகர் என்றும் அழைக்கப்படுகிறார். library : நூலகம் : வெளியான நிரலாக்கத் தொகுப்புகள், வழக்கமான செயல்கள், எப்பொழுதாவது நிறைவேற்றப்படும் பணிகள் ஆகியவைகள் கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் இடம். நிரலாக்கத் தொகுப்பு நூலகம் போன்றது. library automation : நூலகத்தானியக்கம் : நூலக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு கணினி மற்றும் பிற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்துதல். library function : உள்ளிணைப்பு செயற்கூறு;நூலகச் செயற் கூறு. library manager : நூலக மேலாளர் : ஒரு இயக்க முறைமையில் சேமிக்கப்பட்ட நிரல் தொகுப்புகளைப் பராமரிக்கும் நிரலாக்கத் தொகுப்பு. library routine : நூலக வாலாயம் : நிரலாக்கத் தொகுப்பு நூலகம் ஒன்றில் கையாளப்படும் சோதிக்கப்பட்ட வழ்மை அல்லது நிரல். . lib. us : லிப். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி, அமெரிக்க நாட்டிலுள்ள ஒரு நூலகத்துக்குரியது என்பதைச் சுட்டும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர். licence agreement உரிம ஒப்பந்தம் : ஒரு மென்பொருள் விற்பனையாளருக்கும் ஒரு பயனாளருக்கும் இடையேயான ஒரு சட்ட ஒப்பந்தம். மென்பொருள் தொடர்பாக பயனாளருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடும். இந்த உரிம ஒப்பந்தம் பயனாளர் மென்பொருள் தொகுப்பை பிரிக்கும்போதே நடைமுறைக்கு வந்துவிடுகிறது. license contrast : உரிம எதிர்மறை : மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்துவோர் அதனைத் தன்னுடைய கணினியில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கும் சிறுதாள். licensing key : உரிம விசை; உரிமத் திறவி, உரிமத் திறவு கோல் : உரிமம் பெற்ற ஒரு மென்பொருளை நிறுவும்போது, நுழைசொல்லாகப் பயன்படும் ஒரு சிறிய எழுத்துச் சரம். உரிமம் பெற்ற மென்பொருளை சட்டத்துக்குப் புறம்பாக நகலெடுப்பதைக் குறைக்கும் நோக்கத்தில் உரிமத் திறவு கோலான இந்நுழை சொல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. life cycle : வாழ்க்கைச் சுழற்சி; ஆயுள் சுழற்சி : நிரல் தொகுப்பு அல்லது முறைமை ஒன்றின் தோற்ற வழி. துவக்கக் கருத்து, உருவாக்கம், அமல் மற்றும் மாற்று ஒன்று உருவாக்கப்படும் வரை அல்லது இனிமேல் பயன்படாது என்ற நிலை ஏற்படும் வரை பராமரிப்பு. life testing : ஆயுள் சோதனை; வாழ்க்கைச்சோதனை : களத்தில் நம்பகத் தன்மையை உறுதி செய்ய மின்னணு பாகங்களை விரைந்து சோதித்தல். இம்முறையில் தான் பெரும்பாலான நுண்வகைப்படுத்தி நிரல் தொகுப்பு முறைமைகள் செயல்படுகின்றன. கடைசியாக அனுப்பப்பட்ட தரவு அல்லது கட்டளை நிரல் தான் முதலில் பெறப்படுகிறது. ligature : லிகாச்சர் : (உடலால் தொடக்கூடிய) தனி அலகாக வடிவமைக்கப்பட்ட இரண்டு அல்லது மேற்பட்ட தட்டச்சு முக எழுத்துகள். light dots : ஒளிப்புள்ளிகள். light emitting diode : ஒளியுமிழ் இரு முனையம் அதற்கு மின்சக்தி அளிக்கப்படும்போது ஒளியுமிழ் இருமுனையம் ஒளியை உமிழும் ஒரு மின்னணு சாதனம். 'மின்சாரம் இயங்குகிறது என்பதை உணர்த்தும் குறியீடுகளாக கணினிகளிலும் கணினி மென்பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றன. lightest : மிகு ஒளிர்மை, மிகவும் லேசான. light guide : ஒளி வழிகாட்டி;ஒளி வழிப்படுத்தி : ஒளி இழைக் கம்பி போன்ற ஒளியைக் கடத்த வடிவமைக்கப்பட்ட கம்பி. lighting : வெளிர்மை : Olsu6flisou : ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் உள்ள ஒளி அல்லது இருள். light pen : ஒளிப்பேனா : ஒரு உள்ளீட்டு சாதனம். கணினித் திரையுடன் இணைக்கப்பட்ட ஒர் எழுத்தாணி. இந்த எழுத்தாணியைக் கொண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சின்னங்களைச் சுட்டி, எழுத்தாணியின் பக்கவாட்டிலுள்ள ஒரு விசையை அழுத்தித் தேவையானதைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்தாணியால் திரைப்பரப்பைத் தொட்டுத் தேர்வு செய்யலாம். இது, சுட்டி மூலம் தொட்டுச் சொடுக்குவதற்கு இணையானது. lightsource : ஒளி மூலம்;கணினி வரைகலையில் வருவது. முப்பரிமாண பொருளின்மீது ஒளியின் விளைவை போலியாக உரு வாக்க பயன்படுத்தப்படுகிறது. சில நிரல் தொடர்களில் பல் ஒளி மூலங்களைக்கணிப்பிடமுடியும். lightwave system : ஒளி அலை அமைப்பு : மிக அதிக வேகத்தில் ஒளி இழைகள் மூலம் ஒளித் துடிப்புகளை அனுப்பும் சாதனம் (நொடிக்கு ஜி-பிட்வரிசை). நகரங்களுக்கிடையிலான தொலைபேசி இணைப்புகள் ஒளி அலை அமைப்புகளாக மாற்றப் பட்டுள்ளன. Light Weight Directory Access Protocol : குறைச்சுமை கோப்பக அணுகு நெறிமுறை : இது ஒரு பிணைய நெறிமுறை. டீசிபீ/ ஐபீநெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப் பட்டது. எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது. கணினியிலுள்ள தரவு குவிப்பைத் தேடி பயனாளர் பெயர், மின்னஞ்சல் முகவரி, பாதுகாப்புச் சான்றிதழ் அல்லது தொடர்புக்கான பிற தகவல் இவை போன்ற ஒரு குறிப்பிட்ட தகவல் குறிப்பைப் பெறுவதற்கான ஒற்றைக் கருவியை இந்த நெறிமுறை பயனாளர்களுக்கு வழங்குகிறது. Light Weight Internet Person Schema : குறைச்சுமை இணைய நபர் திட்ட வரை : குறைச்சுமைக் கோப்பக அணுகு நெறிமுறையில், பயனாளர் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தகவலைப் பெற்றுத் தருவதற்கான வரன்முறை. LILO : Last in Last out என்பதற்கான குறும்பெயர். வரிசைப் பட்டியல் அல்லது ஒன்றிலிருந்து கடைசியாக இடப்பட்டதை கடைசியாகப் பெறும் சேமிப்பு அல்லது பெறும் முறை. LIM EMS : லிம் இஎம்எஸ் : லோட்டஸ் /இன்டெல்/மைக்ரோசாஃப்ட் விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும் Lotus/Intel/Microsoft Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். limit check : வரம்புச்சோதனை : ஒரு குறிப்பிட்ட எல்லை வரம்புக்குள் மதிப்பீடுகள் அமைகின்றனவா என்பதை தரவு களம் ஒன்றின் மதிப்பீட்டை சோதனை செய்யும் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு உத்தி. limiting operation : வரம்பு இயக்கம் : முறைமை ஒன்றில் மிகச் சிறிய திறன் அல்லது மிகக் குறைவான வேகம் உள்ள செயல். மாற்று வழி எதுவும் இல்லாத நிலையில் குறைவான திறன் உள்ள செயல் உள்ள நடவடிக்கை காரணமாக அந்த முறைமையின் முழுத்திறனையும் மிகக்குறைவான திறன் உடைய வரம்பு இயக்கத்தின் திறனாக வகைப்படுத்தலாம். Bottle neck என்பதற்கு ஒத்தது. Bound என்பதைப் பார்க்கவும். பMs : லிம்ஸ் : லிம்ஸ் எம்ஸ் வரையறைகளுடன் கூட்டுறவில் உருவான லோட்டஸ் இன்டெல் மைக்ரோசாஃப்ட். Linda : லின்டா : சி, சி++ போன்ற மொழிகளுடன் சேர்க்கப்படும் இணை செயலகப் பணிகளின் தொகுதி. செயலாக்கங்களுக்கிடையே தரவுகளை உருவாக்கி, மாற்றியனுப்ப இது அனுமதிக்கிறது. line : வரி; இணைப்பு : 1. கணினி வரைபடம் ஒன்றில் முடிவு இல்லாமல் ஜியோமிதியில் இரு திசைகளில் நீளும் புள்ளிகள் அல்லது கோடுகள். கணிதவியலில் வேறு வழியாகக் கூறப்படாதவரை இக்கோடுகள் நேர் கோடுகள் என்று கூறப்படும். 2. பெரும்பாலானநிரல்தொகுப்பு மொழிகளில் ஒரு கோடு கண்டறியக் கூடிய எண் ஒன்றில் ஒரு கோடு துவங்குகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகளைக் கொண்டதாக உள்ளது. சில நேரங்களில் ஒரு கட்டளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் தேவைப்படுகின்றன. 3. தரவு தொடர்பில் எந்த ஒரு வகையான் வழி குறிப்பாக தொலைபேசிஇணைப்புகள். line adapter : கம்பி ஏற்பி : தகவல் தொடர்புகளில் பயன்படும் மோடெம் போன்ற ஒரு சாதனம். தகவல் தொடர்புக் கம்பியில் அனுப்புவதற்கேற்ற வடிவில் டிஜிட்டல் சமிக்கையை மாற்றுகிறது. இணை/தொடர் மாற்று தலையும், குறிப்பேற்றம் மாடுலேஷன், குறிப்பிறக்க த்தையும் (டீ மாடுலேஷன்) மாற்ற உதவுகிறது.
— LCD projector
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eg797nf4/
தமிழ்“எல். சி. டி. படப்பெருக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eg797nf4/APA
Oliyon Research. (2026). எல். சி. டி. படப்பெருக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eg797nf4/MLA
"எல். சி. டி. படப்பெருக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eg797nf4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment