சிறுவள்ளி
ciṟuvaḷḷi
இதன் தாவரவியல் பெயர் அல்லோஃபில்லஸ் செர்ரேட்டஸ் (Allophylus serratus) ஆகும்.
இதன் தாவரவியல் பெயர் அல்லோஃபில்லஸ் செர்ரேட்டஸ் (Allophylus serratus) ஆகும். இது சாபின்- டேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சிறுவள்ளி ஒரு நடுத்தர உயரமுள்ள மரம். இலையடிச் செதில்களற்ற உள்ளங்கை அமைப்பில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டு இலைகள் மாற்று அடுக்கு அமைவில் இருக்கும். இதன் மலர்கள் ரெசீம் வகை மஞ்சரியில் வெள்ளை நிறத்தில் சிறியவாக இருக்கும்.
மலர்கள் ஒழுங்கற்ற நான்கு புல்லிகளையும், நான்கு அல்லிகளையும், எட்டு மகரந்தங்களையும் கொண்டவை. ஒவ்வோர் அறையிலும், ஒரு சூலுள்ள இரண்டு சூலறைகளைக் கொண்ட சூலகத்தையும் உடையவை. சிறுவள்ளியின் கனி வெடிக்காத சதைப் பற்றுடைய உலர்கனி வகையைச் சார்ந்தது.
டயஸ்கோரியா என்ற இனத்தில் பல சிற்றினங்கள் உண்டு, வள்ளி எனப்படும் இவ்வினம், டயஸ்கோரியேசி எனப்படும் ஒரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் காணப்படும் சிற்றினங்கள் ஆஃப்ரிக்கா, வெப்ப மண்டல ஆசியா முதலிய நாடுகளில் தன்னிச்சையாக வளர்கின்றன. இச்சிற்றினங்களில் ஒன்றைச் சிறுவள்ளி என்று தாவரவியலார் கூறுவர். —வே. வெங்கடேசலு
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 382)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efzr9hqj/
தமிழ்“சிறுவள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/efzr9hqj/APA
Oliyon Research. (2026). சிறுவள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/efzr9hqj/MLA
"சிறுவள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/efzr9hqj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment