இழிபொருட்பேறு
iḻiporuṭpēṟu
இழிபொருட்பேறு என்பது ஒருசொல் உயர்பொருளிலிந்து இழிபொருளைப் (Degradation) பெறுவது.
இழிபொருட்பேறு என்பது ஒருசொல் உயர்பொருளிலிந்து இழிபொருளைப் (Degradation) பெறுவது. ஒரு மொழியிலுள்ள சொற்கள் தம் பொருளை இழப்பதும் புதிய பொருளைப் பெறுவதும் தம் இயல்பான பொருளிலிருந்து மாற்றம் பெறுவதும் இயல்பு. இவ்வாறு சொற்களின் பொருளில் ஏற்படும் மாற்றம் சொற்பொருள் மாற்றம் (Semantic Change) எனப்படும். ஒரு சொல் உயர்வான பொருளில் கையாளப்பெற்று, காலப்போக்கில் இழிவான பொருளில் கையாளப்பெறுவதும் உண்டு. இழிபொருட்பேறு, சொற்பொருள் மாற்றங்களின் வகைகளுள் ஒன்று.
தமிழ் மொழியில் ‘நாற்றம்’ என்னும் சொல் நறுமணத்தைக் குறிக்கப் பயன்படுத்த பெற்றுப், பின்னர்த் தீநாற்றத்தினைக் குறிக்கப் பயன்படுத்தப் பெற்று வருகிறது. இதனைப் போன்று இறைவனுக்குப் பணிபுரியும் பெண்ணைக் குறித்த ‘தேவதாசி’ என்னும் சொல் இக்காலத்தில் விலைமகளிரைக் குறிக்கப் பயன்படுத்தப் பெற்று வருகிறது.
சொற்களுள் சில இழிபொருளைப் பெறுவதற்குச் சமுதாய நிலையே காரணமாக அமைகிறது. இல்லற வாழ்வினைத் துறந்து இறை பணிக்குத் தங்களை ஒப்படைத்த தேவதாசிப் பெண்கள் தவறான வழியில் செல்வதற்குச் சமுதாயம் காரணமாக அமைகிறது. இவ்வாறான தவறான முறைக்குப் பயன்படுத்தப்பட்டமையால், தேவதாசி என்னும் சொல் விலைமகளிரைக் குறிக்கவும் பயன்படலாயிற்று. ஈண்டுத் ‘தேவதாசி’, ‘விலைமகளிர்’ என்னும் இரு சொற்களுக்கிடையே காணப்பெறும் பொருள் ஒப்புமை (Similarity of Sense) காரணமாகத் ‘தேவதாசி’ என்னும் சொல் ‘விலைமகளிர்’ என்ற பொருளையும் பெற்றுப் பொருண்மை நிலையில் மாற்றம் பெறுகிறது. ஏ.ஆ.
துணை நூல்கள்
Reddy, G.N., A Study of Telugu Semantics, Sri Venkateswara University, Tirupati, 1966.
Ullmann, S., Semantics—An Introduction to the Science of Meaning, Blackwell, Oxford, 1962.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 462)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efv78q7p/
தமிழ்“இழிபொருட்பேறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/efv78q7p/APA
Oliyon Research. (2026). இழிபொருட்பேறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/efv78q7p/MLA
"இழிபொருட்பேறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/efv78q7p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment