ஒரு வேதாந்தி, இவர் அத்துவிதத்தில் நம்பிக்கையுடையளர். இறைவன் பற்றிய பிற கொள்கைகளை வன்மையாக மறுத்துரைக்கும் இயல்பினர். சங்கற்ப நிராகரணம் என்ற வேதாந்த நூலை இவர் இயற்றினார். இவர் காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டு என்பர். இப்பெயரில் மற்றொரு சமயப் பெரியார் வாழ்ந்துள்ளார். இவர் 20–ஆம் நூற்றாண்டினர். இவர் பெயரில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில: சொரூப சித்தாந்த மாலை, மோட்ச சாதன விளக்கம் முதலியன. நிச்சல இராமானந்த சுவாமிகள் என்ற மற்றொரு பெரியாரும் இந்நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார்.