அலகு

alaku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
2.
அறிவியலார் எந்த ஓர் இயற்பொருளையும் (Physical Quantity) அளக்க ஒரு அலகை (unit of measure) கையாளுவர். இவ்வகை அலகுகளில் பலவும் உலகளாவிய ஒரு அமைப்பால்(SI units) தகுதரப்படுத்தப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
3.
ஒரு பறவையின் மூக்கு அல்லது வாய்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
4.
தெய்வ வேண்டுதலுக்காக உடலில் குத்திக் கொள்ளும் கம்பியை அலகு என்பர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
5.
அளவு , தொகை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
6.
அளவுக் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
7.
சுருதியளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
8.
குற்றம் (flaw)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
9.
எண் (Number) , கணக்கு (Calculation)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
10.
அலகிருக்கை வெண்பா : செய்யுள் அசை கணக்கிடு (To scan , as a verse) ,
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
11.
அலகு-கழிக்க : கணக்கு தீர்க்க (To settle accounts)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
12.
கழஞ்சு , 916 , தமிழர் அளவைகள்,SI units
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலகு)
13.
சோதிடம், துடைப்பம், நெற்கதிர், பலகறை, பறவை மூக்கு, கொதுகு, வீட்டின் உறுப்பு
14.
நெற்கதிர், நெல், (குறள் 1034).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 30)
15.
இயல்பு, கூரி, வாள்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 29)
16.
ஒரு சொற்பகுதி சரத்தினை அதன் பிரிவு பகுதிகளுக்கு கொண்டு செல்லுதல். டாஸ் (DOS) மூலம் கட்டளை வரி தகவலை அலகிட்டு கோப்பு அணுகு பணிகளில் பயன்படுத்துவதற்காக திருத்தி அமைக்க முடியும் — parse
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1085)
17.
ஒரு கத்தியின்வெட்டுவாய். விமானச் சுழல் விசிறியின் அலகு போன்ற ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் தட்டையான தீவிர இயக்கப் பகுதி. — blade
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 98)
18.
ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றின் கூர்மையான அலகுப் பகுதி கடைசல் எந்திரத்தின் திருகிழைமுனை, துளையிடு எந்திரத்தின் கதிர், துரப்பணத்தின் கூர் அலகு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு — nose
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 453)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efbe49gw/

தமிழ்
“அலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efbe49gw/
APA
Oliyon Research. (2026). அலகு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/efbe49gw/
MLA
"அலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/efbe49gw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment