சிட்ரோநெல்லா
ciṭrōnellā
இத்தாவரம் போயேசி என்னும் ஒரு வித்திலைப் பிரிவின் குடும்பத்தைச் சேர்ந்தது.
இத்தாவரம் போயேசி என்னும் ஒரு வித்திலைப் பிரிவின் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத் தாவரங்கள் பெரும்பாலும் பல வகைகளாகக் காணப்படுவதால், இக்குடும்பம் புல் குடும்பம் எனப்படும். சிட்ரோநெல்லா, சிம்ப்போகன் நார்டஸ் (Cymbapogan nardus), ஆண்ட்ரபோகன் நார்டஸ் (Andropogan nardus) என்னும் தாவரவியல் பெயர்களைக் கொண்டது.
சிட்ரோநெல்லா எங்கும் வளரக் கூடிய குறுஞ்செடியாகும். இது ஒரு பருவ அல்லது பல பருவச் செடியாகவும் வளர்கின்றது. இந்தியா, பர்மா, மலேசிய முந்நீரகம், ஸ்ரீலங்கா, ஆசிய, ஆஃப்ரிக்க, ஆஸ்திரேலியப் பகுதிகளில் இத்தாவரம் பரவலாகக் காணப் படுகிறது. 1.5—2 மீ வளரக் கூடிய இத்தாவரம் நறுமணமுடையது. தண்டு தடித்தும், நீண்டும் இருக்கும். மேல்பகுதி நெருங்கிக் கிளைத்தும், கூட்டுப் பூத்திரள் (compound panicle) மஞ்சரி நிறைந்தும் காணப்படும். தாவரத்தின் இடைக் கணுப் பகுதி 10 மி.மீ குறுக்களவுடன் வழவழப்பாக, கருமையான மயிரிழை கொண்டு காணப்படும். இலைகள் நீளமாக, குறுகியவையாகத் தெளிவான வெண்மையான நடு நரம்பு கொண்டவையாக உள்ளன. தண்டின் மேற்புறத்திலுள்ள இலை சிறியதாகவும், கீழ்ப்புறத்திலுள்ள இலை பெரியதாகவும் காணப்படும். இலையின் அடிப்பகுதி குறுகலாக, நுனி மென் இழை வளரிகள் கொண்டிருக்கும். இலையுறை (leaf sheath) சொர சொரப்பாக அல்லது சில சமயம் மென்மையாக இருக்கும். இலைச் செதில் (ligule) மெல்லிய சவ்வு போன்று உள்ளது. 2—2.5 மி.மீ நீளமுடைய இலைச் செதில் சொரசொரப்பாக அல்லது நீட்சிகள் கொண்டதாகக் காணப்படுகிறது.
மஞ்சரி. பெரிய கூட்டுப் பூத்திரள் வகை. இதில் மஞ்சரிக் காம்பு, மடலுடன் கூடிய ரெசீம் (raceme)கிளைகள், மலர்களைத் தாங்கியுள்ளன. மலர்கள் காம்பற்றவை. மலரடிச் செதிலுடைய இரு பால், இரு பக்கச் சம ஒழுங்கற்ற மலர்கள்.
பூவிதழ் வட்டம். சிறு இதழ்கள் (lodicules) இரண்டும், மகரந்தக் கேசரங்கள் மூன்றும் காணப்படுகின்றன. ஒரு சூலிலையால் ஆன சூலறை கொண்ட மேல் மட்டச் சூல் பையில், ஒரு சூல் கீழ் ஒட்டு முறையில் அமைந்துள்ளது. கனி.. உலர் வெடியாக் கனி (caryopsis) வகையைச் சேர்ந்தது. விதையில் முளை சூழ் தசை (endosperm) காணப்படுகிறது.
பயன்கள். தாவரம் நறுமணம் கொண்டிருப்பதால், தண்டிலிருந்தும், இலைகளிலிருந்தும் நறுமணமுடைய சிட்ரோநெல்லா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் ஒப்பனைப் பொருள், மணப் பொருள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், கொசு விரட்டவும் பயன்படுகிறது. இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, இரைப்பைக்கு வலிவூட்டவும், அதன் செயல்பாட்டைத் தூண்டவும் பயன்படுகிறது. சிட்ரோநெல்லா எண்ணெய், ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகவும், உடல் எரிச்சலைத் தவிர்க்கவும் பயனாகிறது. கம்போடிய நாட்டில் இந்த எண்ணெய் வியர்வையைப் பெருக்கப் பயன்படுகிறது. வேர். உடம்பில் ஏற்படும் தாக்குதலை எதிர்க்கவும், சிறுநீரை மிகுதியாகச் சுரக்கச் செய்து வெளியேற்றவும் மருந்தாகப் பயன்படுகிறது.
—நா. வெங்கடேசன் நூலோதி. B.P. Pandey, Taxonomy of Angiosperms, S.Chand and Co.. New Delhi, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 211)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ee5yx7rp/
தமிழ்“சிட்ரோநெல்லா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ee5yx7rp/APA
Oliyon Research. (2026). சிட்ரோநெல்லா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ee5yx7rp/MLA
"சிட்ரோநெல்லா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ee5yx7rp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment