மீனாட்சிசுந்தரம் பிள்ளை
mīṉāṭcicuntaram piḷḷai
பொருள்கள் · Senses
1.
இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று கூறப்படுபவர். சைவ மரபினா். இவரது பெயரைக் குறிப்பிடாமல் பிள்ளையவா்கள் என்றே யாவரும் குறிப்பிட்டு வந்த பெருமை சான்றவா். இவா் இலட்சத்திற்கு மேல் கவிகளைப் பாடியவா். இவா் பாடியுள்ள தலபுராணங்களும் பிரபந்தங்களும் பலப்பலவாகும். திருச்சிராப்பள்ளியில் பிறந்து, திருவாவடுதுறை ஆதினத்தில் புலவராகத் திகழ்ந்தவா். இவரும் ஆறுமுக நாவலரும் ஒருகாலத்தவா். இவாிடம் கல்வி பயின்று பெருமை பெற்றவா் பலராவாா். தியாகராய செட்டியாா், டாக்டா் சுவாமிநாதய்யா், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வல்லூர் தேவராச பிள்ளை முதலியாோ்கள் இவரது மாணவா்களே. இவா் இயற்றிய நுாற்களுள் சில சேக்கிழாா் பிள்ளைத் தமிழ், வாட்பாேக்கிக் கலம்பகம், திருத்தில்லை யமக அந்தாதி, தனியூர்ப் புராணம், காசி ரகசியம், திருவாருா்த் தியாகராயா் மாலை, திருவிடைமருதுாா் உலா முதலியன. கி.பி.19-ஆம் நுாற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ecrewaaf/
தமிழ்“மீனாட்சிசுந்தரம் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecrewaaf/APA
Oliyon Research. (2026). மீனாட்சிசுந்தரம் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ecrewaaf/MLA
"மீனாட்சிசுந்தரம் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecrewaaf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment