இது ஒரு பொருளின் நிலையான உற்பத்தி அளவில் மாறுதல்கள் ஏற்படா வண்ணம், உற்பத்திக் காரணிகளை இறுதிநிலையில் பதிலீடு செய்யும் நுட்ப வீதத்தைக் குறிக்கும். ஒரு ‘X’ என்னும் காரணிக்குப் பதிலீடாக உற்பத்தியின் உ அளவு நிலையாயிருக்கும் போது, எவ்வளவு ‘Y’ காரணியின் அலகுகள் மாற்றீடு (Replaced) செய்யப்படுகின்றனவோ அது இறுதி நிலைத் தொழில் நுட்பப் பதிலீட்டு வீதம் (Marginat Rate of Technical Substitution) ஆகும். பட்டியல்–1 இதைத் தெளிவாக விளக்குகிறது. ஒரு காரணியின் இறுதிநிலை அலகைப் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் மற்றொரு காரணியின் அளவு இறுநிதிலை நுட்பப் பதிலீட்டு வீதம் எனப்படுகிறது. A,B,C,D,E என்ற உள்ளீடுக் காரணிச் சேர்க்கையின் (Input Factor Combinations) உற்பத்தி நிலைகளில் உற்பத்தியின் மொத்த அளவு நிலையாக உள்ளது. ‘A’ காரணிச் சேர்க்கையிலிருந்து ‘B’–க்கு மாறும்போது 4 ‘Y’ அலகுகள் மாற்றீடு செய்யப்படுகின்றன. இங்கு இறுதிநிலைப் பதிலீட்டுவீதம் 4 ஆகும். பின்னர் ‘B’ காரணிச் சேர்க்கைகளிலிருந்து ‘C’க்கு மாறும்போது 3 ‘Y’ அலகுகள் மாற்றீடு செய்யப்படுகின்றன. மொத்த உற்பத்தியின் அளவில் மாறுதல்கள் எதுவுமின்றி இறுதிநிலைப் பதிலீட்டு வீதம் இப்போது 3 ஆகும். தொடர்ந்து இதே வகையில் ‘C’–யிலிருந்து ‘D’ காரணிச் சேர்க்கைக்கு மாறும் போது இறுதிநிலைப் பதிலீட்டுவீதம் 2 ஆகவும், ‘D’–இலிருந்து ‘E’க்கு மாறும்போது 1 ஆகவும் காணப்படுகிறது. வரைபடம் – 1 இல் கொடுக்கப்பட்டுள்ள சம உற்பத்தி வளை கோட்டின் (Equal Product Curve) சரிவின் புள்ளியிலிருந்து இறுதிப் பதிலீட்டு வீதத்தைப் பெறலாம். சம உற்பத்தி வளைகோடு P, A–யிலிருந்து B–க்கு வலப்புறமாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. இறுதிநிலைப்பதிலீட்டு வீதம் வரைபடம் – 1 சம உற்பத்தி வளைகோடு அதில் Y காரணியின் அளவு AC (ΔY), X காரணியின் அளவு CB (ΔX)-க்காக மாற்றீடு செய்யப்படுகிறது. எனவே, சம உற்பத்தி வளைகோட்டு P இன் சரிவுப் புள்ளி ΔY/ΔX க்குச் சீராகச் சரி சமமாக (Equal) உள்ளது என அறியப்படுகிறது. ::இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம் = சரிவுப்புள்ளி A = ΔΥ/ΔX சம உற்பத்தி வளைகோடு கீழே நகர்வது ஒரு சிறிய அளவு காரணி Y ஐக் குறைத்துக் கொண்டு, அதற்கு ஈடாக ஓர் அளவு உழைப்பைக் கூட்டிக் கொள்வதுதான். இது சம உற்பத்தி வளைகோட்டின் இலக்கணப்படி, ஒரு நுனியிலிருந்து மற்றொரு நுனி வரை ஒரே உற்பத்தியைக் காட்டுவதாகும். எனவே, கூடுதல் X காரணியால் ஏற்படும் ஆதாயமும் சிறிதளவு குறைந்த Y காரணியால் ஏற்படும் இழப்பும் சீராக (சமமாக) இருக்கும். இக்காரணிகள் X, Y ஐ உழைப்பு முதல் (Capital) C என எடுத்துக் கொண்டால், கூடுதல் உழைப்பினால் ‘L’ கிடைக்கும் உற்பத்திப் பெருக்கத்தை, அதன் உழைப்பின் இறுதிநிலை உற்பத்தியைக் கொண்டு (MPPL) பெருக்கினால் கிடைக்கும். அதாவது ΔL × MPPL. இதில் ΔL என்பது கூட்டப்பட்ட உழைப்பின் (Labour) அளவு. ΔC × MPPC முதல் ΔC குறைக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முதலின் இறுதிநிலை உற்பத்தியைக் கொண்டு (MPPC) பெருக்கினால் கிடைக்கும். அதாவது ΔC x (MPPC) இதில் C என்பது குறைக்கப்பட்ட முதலின் அளவு. எனவே, ΔL உற்பத்தி இழப்பு = உற்பத்தி ஆதாயம் ΔL || = || MPPL MPPC இறுதிநிலைப் பதிலீட்டு வீதம் பதிலீடு செய்யப்படும் காரணிகள் (X, Y) இறுதிநிலை உற்பத்தி விகிதத்திற்குச் சமமாக உள்ளது என்பது இக்கோட்பாட்டின் சிறப்புக் கூறு ஆகும். எஸ்.பெ.