மக்னீசியம்
makṉīciyam
இது ஒருவகை உலோகமாகும். இதன் பயன்பாட்டை இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்பிருந்தே எகிப்தியரும் ரோமரும் அறிந்து அதைப் பயன்படுத்தியிருப்பதை ஆவணங்களும் பழைய கருவிகளும் புலப்படுத்துகின்றன.
இது ஒருவகை உலோகமாகும். இதன் பயன்பாட்டை இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்பிருந்தே எகிப்தியரும் ரோமரும் அறிந்து அதைப் பயன்படுத்தியிருப்பதை ஆவணங்களும் பழைய கருவிகளும் புலப்படுத்துகின்றன.
இது ஒரு சிறந்த ஒடுக்கியாகவும் பயன்படுகிறது. உலோகவியலில் உலோகங்களோடு கலந்திருக்கும் எஞ்சிய ஆக்சிஜனை நீக்கவும் பயன் படுகிறது. ஒளிச்சேர்க்கைக்குப் பெரிதும் பயன்படும் குளோரபிள் எனும் தாவரத்தில் காணப்படும் பச்சையம் ஒரு மக்னீசிய அணைவுச் சேர்மமாகும்.
ஆசியா மைனரில் மக்னீசியா எனும் கிராமத்தில் இவ்வுலோகம் கிடைத்ததால் இஃது மக்னிசியம் எனும் பெயரைப் பெற்றது.
1870இல் ஜான் என்பவர் தூய மக்னீசியம் உலோகத்தை அதன் தாதுக்களிடமிருந்து பிரித்தெடுத்தார்.
இரும்புடன் மக்னீசிய உலோகத்தைக் கலந்து கலப்பு உலோகம் தயாரிக்கின்றனர். காரணம், மக்னிசியம் கலப்போடு தயாரிக்கப்படும் எஃகு உறுதி மிக்கதாகவும் மீள் திறமுடையதாகவும் அமைகிறது. சிறந்த தொற்று நீக்கியான பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை மக்னிசியமுடன் பொட்டாசியம், ஆக்சிஜன் கலந்து தயாரிக்கப்படுகிறது. வண்ணப்பூச்சிலும் வார்னிசுகளிலும் உயர்த்தியாகப் பயன்படும். மக்னீசிய டையாக்சைடு இதைக் கொண்டு தயாரிக்கப்பட்டதேயாகும்.
இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மக்னிசிய உலோகம் அதிக அளவில் கிடைக்கிறது.
தூய மக்னீசியம் ஓரளவு கடினமான, அதே சமயம் நொறுங்கும் தன்மையும் கொண்டது. இது சிறிது சிவப்புக் கலந்த சாம்பல் நிற உலோகமாகும்.
ஸ்பீசல் (Spiesel) எனப்படும் கரி, மக்னிசியக் கலவை எஃகுத் தயாரிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றும் எஃகில் மக்னீசிய விகிதம் அதிகரிக்கும்பொழுது அதன் கடினத்தன்மையும் அதிகரிக்கும்.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 247)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ebf979su/
தமிழ்“மக்னீசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ebf979su/APA
Oliyon Research. (2026). மக்னீசியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ebf979su/MLA
"மக்னீசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ebf979su/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment