அட்டபுட்பம்
aṭṭapuṭpam
அட்டபுட்பம் என்பது எண்வகை மலர் எனப் பொருள்படும்.
அட்டபுட்பம் என்பது எண்வகை மலர் எனப் பொருள்படும். புறத்தே இறைவன் உருவத்தை அமைத்து வழிபாடு செய்வதனைப் புறப்பூசை என்றும், அருவமாய் ஞானவடிவாய் விளங்கும் அவ்விறைவனை அகத்தே கொண்டு வழிபாடு செய்வதனை அகப்பூசை என்றும் சைவ சமயம் குறிப்பிடுகிறது. புறப்பூசையில் இறைவனை மலரிட்டு வழிபடுவது இன்றியமையாதது. புறப்பூசைக்குரிய எண்வகை மலர்கள் புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பனவாம். புறப்பூசைக்குரிய எண்வகை மலர்களைப் போல, எட்டு வகையான மலர்களாக உருவகப்படுத்திக் கூறப்படும் எண்வகைப் பண்புகளைக் கொண்டு ஞான வழிபாடாகிய அகப்பூசை செய்யப்பெற வேண்டும் எனச் சமயநூல்கள் விதிக்கின்றன. கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு ஆகிய எட்டுப் பண்புகளும் அகப்பூசைக்குரிய எட்டு மலர்களாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 208)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3s6ubub/
தமிழ்“அட்டபுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e3s6ubub/APA
Oliyon Research. (2026). அட்டபுட்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e3s6ubub/MLA
"அட்டபுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e3s6ubub/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment