அரிசேனர்
aricēṉar
அலகாபாத்துக் கற்றூண் சாசனத்தை வரைந்தவராவார்.
அலகாபாத்துக் கற்றூண் சாசனத்தை வரைந்தவராவார். அலகாபாத்தின் தொன்மையான பெயர் பிரயாகை என்பதாகும். இவர் கி.பி. 4–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமுத்திரகுப்த மாமன்னரின் மெய்க்கீர்த்தியை வடமொழியில் இக்கற்றூணில் அரிசேனர் (Harishena) பொறித்துள்ளார். 33 வரிகளைக் கொண்ட இம்மெய்க்கீர்த்தி பல பகுதிகளில் சிதைவுண்டுள்ளது. சமுத்திரகுப்தரின் வெற்றிகளைக் குறிப்பாகத் தென்னிந்திய வெற்றிகளைக் குறித்து அறிய உதவும் அருமையான சான்றாக இதைக் கூறலாம். அரிசேனர் சமுத்திர குப்தரின் படைத் தளபதியாக இருந்தவர். இவர் கவிபாடும் ஆற்றல் பெற்றவர் என்பதனைச் சாசனத்தால் அறியலாம். சமுத்திர குப்த மாமன்னரின் அவைப்புலவர் என்றும் அரிசேனரைக் கருதலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 784)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e2ej6akn/
தமிழ்“அரிசேனர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e2ej6akn/APA
Oliyon Research. (2026). அரிசேனர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e2ej6akn/MLA
"அரிசேனர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e2ej6akn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment