அழுந்தூர்
aḻuntūr
தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற இடமுமாகும். இக்காலத்தில் தேரழுந்தூர் என வழங்கப்படும் இவ்வூர், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் மயிலாடுதுறைக்கு அருகில் 10 கல் தொலைவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்து இறைவன் பெயர் வேதபுரீசுவரர்; அம்பிகை பெயர் சௌந்தரநாயகி. இவ்வூரிலுள்ள வைணவத் தலத்திலுள்ள திருமாலை ‘அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே’ என்று திருமங்கையாழ்வார் விளித்துப் போற்றியுள்ளார். இத்தலத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர் ஆமருவியப்பன்; தாயார் பெயர் செங்கமலவல்லி. கவிச்சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் தோன்றியவர். இதனால் இவ்வூர் ‘கம்பன் பிறந்தவூர் காவேரி தங்கும் ஊர் கும்ப முனி சாபம் குலைந்த ஊர்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரின் புறத்தே கம்பர்மேடு என விளங்கும் பகுதி கம்பர் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகிறது. ஆமருவியப்பன் திருக்கோயிலில் கம்பர், அவர் மனைவி ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன.
ஊர்த்துவரதன் என்னும் அரசனது தேர், மேலே செல்லாது இவ்விடத்து அழுந்தியமையால் இவ்வூர் தேரழுந்தூர் எனப்பட்டது என்பதும், இங்கு மறைகள், தேவர்கள், அட்டதிக்குப் பாலகர் ஆகியோர் வழிபட்டனர் என்பதும் கூறப்படுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 934)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dymxguup/
தமிழ்“அழுந்தூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dymxguup/APA
Oliyon Research. (2026). அழுந்தூர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dymxguup/MLA
"அழுந்தூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dymxguup/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment