அங்கீரசன்
aṅkīracaṉ
என்பானுக்கு அங்கீரன், அங்கிரா, அங்கீரகன் எனவும் பெயர்கள் வழங்கின.
என்பானுக்கு அங்கீரன், அங்கிரா, அங்கீரகன் எனவும் பெயர்கள் வழங்கின. இவன் நான்முகனுடைய மானதப் புதல்வர்களுள் ஒருவன். இவனுக்கு உதத்தியன் அல்லது சம்வர்த்தனன், பிருகற்பதி என்ற இரண்டு ஆண் மக்களும் யோகசித்தி என்னும் மகளும் இருந்தனர். தீக்கடவுள் ஒருமுறை தேவருணவாகிய அவியைச் சுமக்க வலியற்றுக் காட்டிற்குச் சென்றான். அக்காலத்தில் தேவர்கள் இவனைத் தீக்கடவுளின் இடத்தில் இருத்தினர். பிறகு தீக்கடவுள் வர, இவன் தீக்கடவுளை முதலாக வைத்துத் தான் இரண்டாவதாய் மகனானான். இவனுடைய மனைவி சிவை. இவளிடத்தில் இவனுக்குப் பிரகச்சோதி, பிரகத்கீர்த்தி, பிருகன்முகன், பிருகன் மதி, பிருகத்பானன், பிருகற்பதி, பிருகற்பிருமன் என்னும் ஆண்களும் அனுமதி, இராகை, சிறிவாலி, குகு, அர்ச்சிகமதி, அவிசுமதி என்னும் பெண்களும் பிறந்தனர். மக்களெல்லாரும் அக்கினிகளாயினர். மகளாகிய யோகசித்தி பிரபாவசு என்னும் வசுவை மணந்து விசுவகர்மனைப் பெற்றாள். த.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 149)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dw4y42bk/
தமிழ்“அங்கீரசன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dw4y42bk/APA
Oliyon Research. (2026). அங்கீரசன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dw4y42bk/MLA
"அங்கீரசன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dw4y42bk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment