அயவா
ayavā
அயவா (Iowa) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று.
அயவா (Iowa) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று. காலிபோர்னியாவுக்கும் மசசூசிட்ஸுக்கும் இடையிலுள்ளது. பரப்பு : 56,045 ச.மைல். முக்கிய ஆறுகள் டமாய்ன், அயவா. முக்கிய ஏரிகள் கிளியர், ஸ்பிரிட், ஸ்டார்ம். மரங்களைத் தொடர்ந்து வெட்டி வருவதால் காடுகள் அழிந்து வருகின்றன. தானியமும் கால்நடையும் மிகுதி. தேன் உண்டாக்குவதில் நான்காவது மாகாணமா யிருக்கிறது. இந்த இராச்சியத்தில் விவசாயமே முக்கியமானது. இராச்சியத்தின் பரப்பில் சுமார் மூன்றிலொரு பங்கில் தரையடியில் நிலக்கரி உள்ளது. ஒரு காலத்தில் காரீயச் சுரங்கங்கள் முக்கியமாக இருந்தன. மக்: 2,621,073 (1950). தலைநகரம் டமாய்ன். இந்த இராச்சியத்தின் முக்கிய கைத்தொழில் இறைச்சியை டப்பிகளில் அடைத்தல். உணவுச் செய்முறைத் தொழிலும் முக்கியமானது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 178)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ds2mduap/
தமிழ்“அயவா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ds2mduap/APA
Oliyon Research. (2026). அயவா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ds2mduap/MLA
"அயவா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ds2mduap/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment