உபேந்திரர்
upēntirar
காசிபருக்கு இந்திரனை அடுத்து அதிதியின்பால் பிறந்தவர்.
காசிபருக்கு இந்திரனை அடுத்து அதிதியின்பால் பிறந்தவர். உபேந்திரர் என்பதற்கு இந்திரனைத் தொடர்ந்து பிறந்தவர் என்பது பொருள். தெய்வலோகத்தில் இந்திரனுக்குத் துணையாய் விளங்குபவர். இவர் பற்றிய குறிப்புகள் அரிவம்சம், பாகவத புராணம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
இவர் விட்டுணுவின் அவதாரமாகிய வாமனராக உருவெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் சென்றார். அவன் தானே மூவுலகத்திற்கும் தலைவன் என்றும், ஒப்பற்ற கொடை வள்ளல் என்றும் மிகுந்த செருக்கோடிருந்தான். மகாபலியிடம் வாமனர் மூன்று அடிமண் கேட்டார். அவன் அதனைக் கொடுக்க ஒத்துக் கொள்ள வாமனர் திரிவிக்கிரமராகி ஓர் அடியால் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியால் விண்ணையும் பாதாளத்தையும் அளந்து, மூன்றாம் அடிக்கு வேறு இடம் இன்றி மகாபலிச் சக்கரவர்த்தியின் விருப்பத்திற்கிணங்க அவனுடைய தலையில் காலை வைத்துப் பாதாளத்தில் அழுத்தி, அங்கே அவனுக்கு வேண்டும் நலன்களை யெல்லாம் அருளினார். அ.ஆ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 927)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dptzafdv/
தமிழ்“உபேந்திரர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dptzafdv/APA
Oliyon Research. (2026). உபேந்திரர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dptzafdv/MLA
"உபேந்திரர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dptzafdv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment