இன்னா நாற்பது
iṉṉā nāṟpatu
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் கபிலதேவர் என்பவராவர். சங்ககாலக் கபிலரின் வேறானவர் இவர். இவர்தம் சமயம் குறித்தும், வாழ்ந்த காலம் குறித்தும் அறியத்தகும் புற–அகச் சான்றுகள் கிடைத்தில. இந்நூலின் கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகியோர் குறிக்கப் பெறுவதால் இதன் ஆசிரியர் சமயப் பொது நோக்குடையவராக இருந்திருக்கலாம் என்பது புலனாகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்ப. மாந்தர் தம்வாழ்வில் மேற்கொள்ளத்தகாத பண்புகள் எவை என்பதை நினைந்து, அவற்றைப் பாடல் தோறும் நான்கு கருத்தாகப் பகுத்து, நாற்பது வெண்பாக்களில் கூறியுள்ளார். இவையிவை இன்னாதவை என்று ஆசிரியர் தம் பாடல் ஒவ்வொன்றிலும் கூறுவதால் அச்சொல்லே நூலுக்கும் பெயராக அமைந்தது. இந்நூலில் ஒரு கருத்தே ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்- களில் வருகிறது. கருத்தின் ஆழம் குறித்தும், அழுத்தம் குறித்தும் ஆசிரியர் மீண்டும் கூறுவதாக அத்தகைய இடங்களைக் கொள்ளலாம். இந்நூலுக்குச் செறிவான பழைய உரை ஒன்று உள்ளது. இது முந்து நூல் மரபுணர்ந்து அமைக்கப்பட்ட உரையாக, அமைந்துள்ளது. ‘ஆற்றல் இலாதான் பிடிந்த படை இன்னா; நாற்றம் இலாத மலரின் அழகின்னா’ என்பன போல இந்நூலிற் கூறப்படும் கருத்துகள் அமைந்துள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 567)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dp9zmcxy/
தமிழ்“இன்னா நாற்பது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dp9zmcxy/APA
Oliyon Research. (2026). இன்னா நாற்பது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dp9zmcxy/MLA
"இன்னா நாற்பது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dp9zmcxy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment