ஆக்கக்கூறு மென்பொருள்

ākkakkūṟu meṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்கூறு ஒன்றினை தன் நிரலில் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொருள் கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனுள்ளே எழுதப்பட்ட ஆணைத்தொடர்கள் எவை, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளாமலே அப்பொருள்கூறின் முழுப்பயனையும் நுகர முடியும். composite key : கூட்டுத் திறவி : ஓர் அட்டவணையில் தகவலைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவுகோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை(record) இனங்காண பணியாளர் எண் திறவுகோல் புலமாகப் பயன்படமுடியும். சில அட்டவணைகளில் ஒற்றைப் புலம் திறவுகோலாகப் பயன்பட முடியாது. பல்வேறு வணிகர்களிடம் கொள்முதல் செய்த பல்வேறு பொருள்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் ஒரு குறிப்பிட்ட ஏட்டினை (record) இனங்காண வணிகர் எண்+பொருள் எண் இரண்டு புலங்களும் சேர்ந்த கூட்டுத் திறவுகோலையே பயன்படுத்த முடியும். composite display : கூட்டுருத் திரைக்கட்சி : தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி கறுப்பு வெள்ளையாகவோ, வண்ணமாகவோ இருக்கலாம், சாதாரண கறுப்புவெள்ளை அல்லது சிபநீ (RGB) வண்ணத்திரைகளைக் காட்டிலும் தெளிவற்றே இருக்கும். சிபநீ காட்சித்திரைகள் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறக்கூறுகளுக்குத் தனித்தனி சமிக்கைகளையும் தனித்தனி இணைப்புக் கம்பிகளையும் கொண்டுள்ளன. ஆனால் கூட்டுருக் காட்சித் திரைகள் ஒரே இணைப்புக் கம்பியிலேயே படிமத்தை உருவாக்குவதற்கான தகவல் சமிக்கைகளையும், கிடைமட்ட மற்றும் செங்குத்து வருடல்களுக்கான துடிப்புத் தகவல்களையும் பெறுகின்றன. compressed disk : இறுக்கிய வட்டு; இறுகு வட்டு : ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தகவலைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ்பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தகவலை இறுக்கிச் சுருக்கிப் பதிவதன் மூலம் அதிகமான அளவு தகவலைப் பதிய வழியமைத்துக் கொடுக்கின்றன. compressed drive : இறுகு வட்டகம்; இறுகு இயக்ககம். — component software
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dmjhdk94/

தமிழ்
“ஆக்கக்கூறு மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dmjhdk94/
APA
Oliyon Research. (2026). ஆக்கக்கூறு மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dmjhdk94/
MLA
"ஆக்கக்கூறு மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dmjhdk94/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment