வடிவக் கணிதத்தில், முப்பரிமாண வடிவ அமைப்பில் உள்ள உருவம் பட்டகம் (prism) எனப் படும். பட்டகம், சம அமைப்புள்ள செவ்வகங்கள் அல்லது முக்கோணங்களுக்குச் சம அமைப்புடைய இரண்டு இணை அடிகளைக் கொண்டது. பக்க முகங்கள் (lateral faces) எனப் படும் பக்கங்கள் இணைகரங்களாக இருக்கும். பக்க முகங்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் பகுதி பக்க விளிம்பு (lateral edge) என்றும், விளிம்பு உச்சிப் புள்ளியில் (lateral vertex points) வெட்டிக் கொள்கின்றன என்றும் குறிக்கப்படுகின்றன. அடிப் பக்கங்களின்அமைப்பிற்கேற்பப் பட்டகங்களின் பெயர்கள் குறிக்கப் படுகின்றன. —பங்கஜம் கணேசன்