புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊர். புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் புகையிலைக்குப் பெயர் பெற்றது. கந்தசாமிக் கவிராயர் என்பார் இவ்வூரில் தங்கி அரிமளத் தலபுராணத்தைப் பாடியிருக்கிறார். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழும் ஊர்களுள் அரிமளமும் ஒன்று.