ஆஸ்ட்வால்டு
āsṭvālṭu
(Ostwald 1853-1932) ஜெர்மானிய ரசாயன அறிஞர்.
(Ostwald 1853-1932) ஜெர்மானிய ரசாயன அறிஞர். ரீகா என்னும் நகரிற் பிறந்து பிற்காலத்தில் அங்குப் பேராசிரியரானார். இதன் பின் லைப்சிக் நகரில் பௌதிக, ரசாயனக்கழகத்தின் தலைவராக இருந்தார். தற்காலப் பௌதிக, ரசாயனத் துறையைத் தோற்று வித்தோருள் இவரும் ஒருவர் எனலாம். மின்சார ரசாயனத் துறையையும், கரைவுகளையும் இவர் விரிவாய் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். முதல் உலகப்போரில் ஜெர்மனியில் நவச்சார ஆவியிலிருந்து நைட்ரிக அமிலத்தைப் பெறும் முறையைக் கண்டுபிடித்து வெடிமருந்து உற்பத்திக்கு உதவினார். பௌதிக ரசாயனத் துறையில் வழங்கும். சோதனை முறைகளின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார். ரசாயன வினை வேகங்களையும் இவர் ஆராய்ந்தார். இவரது முறை தற்போது உலகெங்கும் வழங்குகிறது. 1909-ல் இவர் நோபெல் பரிசு பெற்றார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 530)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dde7j7bz/
தமிழ்“ஆஸ்ட்வால்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dde7j7bz/APA
Oliyon Research. (2026). ஆஸ்ட்வால்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dde7j7bz/MLA
"ஆஸ்ட்வால்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dde7j7bz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment