சுரப்பிப் பெருக்கம்
curappip perukkam
சுரப்பிப் பெருக்கம் (adenomatosis) ஓர் அரிய நோய் நிலையாகும்.
சுரப்பிப் பெருக்கம் (adenomatosis) ஓர் அரிய நோய் நிலையாகும். கிரேக்க மொழியில் அடின் (aden) என்றால், சுரப்பி என்று பொருள். ஓமா (oma) என்றால் கட்டி என்று பொருள்; ஓசிஸ் (osis) என்றால், நோய் நிலை என்று பொருள். ஆகவே, சுரப்பிப் பெருக்க நோய் நிலை, ஒரு சுரப்பியிலோ, பல சுரப்பிகளிலோ உண்டாகலாம். கணையத்தின் நுண் தீவுத் திட்டுகளில் (islets) இந்நிலை உண்டாகிறது. நுண் தீவுத் திட்டுகள் மிகையாக வளர்ச்சியடைவதால், குருதியில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. எனினும், இது அரிதாகவே காணப்படும்.
இவ்வாறே, பாரா தைராய்டு சுரப்பிக் கட்டி, பிட்யூட்டரி, கணையம், அண்ணீரகம் ஆகியவற்றின் மிகை வளர்ச்சியால், பல்வேறு நோய் நிலைகள் உண்டாகின்றன. இதைப் பல நாளமில் சுரப்பியின் சுரப்பிப் பெருக்கம் (multiple endocrinal adenomatosis) என்பர். இது எதிர்பாராத, இயல்பிற்கு மாறான விளைவுகளை உண்டாக்கும். இது அரிதாகவே தோன்றும் நோய் நிலையாகும். —மு.க. பழநியப்பன் நூலோதி. H. Betal,Fundamentals of Clinical Endocrinology, Third Edition, Pitman Medical, London, 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 514)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddcq95w6/
தமிழ்“சுரப்பிப் பெருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ddcq95w6/APA
Oliyon Research. (2026). சுரப்பிப் பெருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddcq95w6/MLA
"சுரப்பிப் பெருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ddcq95w6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment