அறம்

aṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தருமம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
2.
புண்ணியம்
அறம்பாவ மென்னு மருங்கயிற் றாற் கட்டி ( 1, 52)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
3.
தகுதியானது. ( 29,)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
4.
சமயம். ( 544.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
5.
ஞானம்
அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (ஞானா. பாயி. 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
6.
அறச் சாலை
அறத்துக்குப் புறத்தன் ( i, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
7.
நோன்பு. ( 386.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
8.
தீய பயனை உண்டாக்கும் சொல்
அறம்விழப் பாடினான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
9.
தருமதேவதை. (குறள், 77.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
10.
யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
11.
சுகம். (சம். அக. Ms.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
12.
இதம்
அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி ( 14, 28).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
13.
27 ஓகங்களில் (யோகம்) ஒரு வகையான சுகர்மம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறம்)
14.
யமன், கடமை, கற்பு, இல்லறம், துறவறம், அறநூல், அறக்கடவுள்
15.
ஆதுலர்க்குச் சாலை, ஐயம், அறுசமயத்தோர்க்குணவு, ஓதுவார்க்கு உண்டி, சேலை, ஏறுவிடுத்தல், காதோலை, பெண்போகம், மகப்பால், மகப்பேறு, மகவளர்த்தல், மருந்து, கொல்லாமை, விலை கொடுத்துயிர் நோய் தீர்த்தல், பிறரிற் காத்தல், கன்னிகாதானம், சோலை, வண்ணார், நாவிதர், சுண்ணம், மடம், குளம், கண் மருந்து, தண்ணீர்ப்பந்தர், தலைக்கெண்ணெய், சிறைச்சோறு, விலங்கிற்குணவு, பசுவுக்கு வாயுறை, அறவைப் பிண மடக்கல், அறவைத் துாரியம், தின்பண்டம நல்கல், ஆவுரிஞ்சுதறி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 408)
16.
தருமம், (குறள் 8); துறவறம், (குறள் 23); நன்மை, (குறள் 31,32); தருமம், (35 முதல் 39, 46, 93, 96, 185, 249, 288, 296,297, 501, 1018, 1019, 1047); தவம் 76; அற நெறி, (குறள் 77); அறவோர் ஒழுக்கம், (குறள் 130); அற நூல்களையும், (குறள் 141, 189); அறம் என்னும், (குறள் 181); அறமென்பது அறநூலை; இது ஆகுபெயர், (குறள் 183); அறக்கடவுள், (குறள் 204).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 34)
17.
பொருள் - இன்பம் - வீடு என்பன நூல்களின் உள்ளுறை: மறைகளின் உட்பொருள் என்பன மட்டுமல்ல; நூல்களும் மறைகளுமெல்லாம் உலகியற்கையின் வடிப்புகளே யாதலின், உலகிற் காணப்படும் எல்லாப் பொருள்களின் உள்ளுறையாகவும், பாடம் புகட்டி அறிவு தெருட்டும் வழி வகைகளாகவும், அவை விளங்குகின்றன.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 211)
18.
நல்லது செய்தல், மனமாசு இல்லாத அனைத்தும் அறன். அறம் சிறப்பும் செல்வமும் ஈனும் அதைவிட ஆக்கம் ஒன்றுமில்லை. “மனத்துக்கன் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்" (குறள் 34)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dd3xzg6y/

தமிழ்
“அறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dd3xzg6y/
APA
Oliyon Research. (2026). அறம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dd3xzg6y/
MLA
"அறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dd3xzg6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment