ஆன்செல்ம்
āṉcelm
ஆன்செல்ம் (Anselm, 1033-1109) ஒருபெரிய தத்துவ சாஸ்திரி.
ஆன்செல்ம் (Anselm, 1033-1109) ஒருபெரிய தத்துவ சாஸ்திரி. இவர் இத்தாலி நாட்டினர்; 1060-ல் பாதிரியானார். இவர் கடவுள் உண்மையை வற்புறுத்தப் பல ஆதாரங்கள் உண்டு என்றும், அறிவிற்கும் நம்பிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதுவது தவறு என்றும் எடுத்துக்காட்டி. ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். 1093-ல் இவர் தம் குருவான லான்பிராங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் கான்டர்பரி ஆர்ச்பிஷப்பாகப் பதவி ஏற்றார் ; 1097-ல் II-ம் வில்லியமுடன் ஒத்துப்போக முடியாமல் ரோமிற்குச் சென்றார். 1100-ல் திரும்பி வந்தவர் I-ம் ஹென்ரியோடும் ஒத்துப்போக முடியாமல் நாட்டை விட்டு அகன்றார். இவர் போப்பின் அதிகாரத்தை முழுவதும் ஆதரித்ததால், இங்கிலாந்தில் மன்னனுடைய அதிகாரம் சிறிது குன்றியது. இவர் 1494-ல் திருத்தொண்டர் (Saints) குழாத்துள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 523)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbahva68/
தமிழ்“ஆன்செல்ம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbahva68/APA
Oliyon Research. (2026). ஆன்செல்ம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbahva68/MLA
"ஆன்செல்ம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbahva68/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment