அருணகிரிநாதரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்று. வில்லுடையான்பட்டி என நெய்வேலி நகருக்கருகில் உள்ள முருகன் தலமே அருணகிரியாரால் திருப்புகழில் அத்திப்பட்டு என்று போற்றப்படுகிறது. இங்கு முருகன் வில்லும் அம்பும் கொண்டு, இருபுறமும் வள்ளி, தேவயானையுடன் ஒரே சிற்பத்தில் அமைந்து விளங்குகிறார். இப்பெயரில் அமைந்த வேறு ஊர்களும் தமிழ்நாட்டில் உண்டு.ரா.கி.