இறையனாராற்றுப்படை
iṟaiyaṉārāṟṟuppaṭai
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரால் இயற்றப்பட்டது.
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரால் இயற்றப்பட்டது. இவர் தஞ்சை மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டத்திலுள்ள பின்னத்தூரில் பிறந்தவர். இவர் சிறுகூற்றம் என்னும் ஊரில் பிறந்ததாகக் கூறுவாரும் உளர். இவரது காலம் கி.பி. 1862 முதல் 1914 வரை ஆகும். இவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருடைய மருகராகிய பொன்னம்பலப்பிள்ளையிடம் தமிழ் கற்றுச் சிறந்த நினைவாற்றலுடன் விளங்கினார்.
இவர் இவ்விறையனாராற்றுப்படையே யன்றி, பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், நீலகண்டேச்சுரக்கோவை, சிவபுராணம், சிவகீதை, நரிவிருத்தம், மாணாக்கராற்றுப் படை, இயன்மொழி வாழ்த்து, தென்தில்லை (தில்லைவளாகம்) உலா, தென்தில்லைக் கலம்பகம், பழையது விடுதூது, செருப்பு விடுதூது, மருதப்பாட்டு, தமிழ்நாயக மாலை, வீரகாவியம், களப்பாழ்ப் புராணம், அரதைக் கோவை, இராமாயண அகவல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும், நற்றிணைக்கு மிகச் சிறந்ததோர் உரையொன்றும் எழுதியுள்ளார்.
வள்ளல்களிடத்திலோ அரசரிடத்திலோ பெருஞ் செல்வத்தைப் பெற்றுவந்த புலவர், கூத்தர், பாணர் முதலானோர் தம்மொத்த புலவர், கூத்தர், விறலியர், பாணர், பொருநர் முதலானோரை இவ்வாறு சென்று இவ்வாறு பாடி, இவ்வாறு பரிசில் பெறுக என வழிப்படுத்துவது ‘ஆற்றுப்படை’யாம். இவ்வாறு எழுந்த நூல்களுள் இவ்விறையனாராற்றுப் படையும் ஒன்று. இந்நூல் இப்போது கிடைக்கப் பெறாமையால் இதிற் கூறப்பட்ட செய்திகளைப் பற்றி அறிய இயலவில்லை. வீ.சொ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 538)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d4repdv5/
தமிழ்“இறையனாராற்றுப்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d4repdv5/APA
Oliyon Research. (2026). இறையனாராற்றுப்படை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d4repdv5/MLA
"இறையனாராற்றுப்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d4repdv5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment