வானவெளி முதல் நிகழ்ச்சிகள்

vāṉaveḷi mutal nikaḻccikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமெரிக்கா உருசியா 1. 1957 அக். 4, உருசியா முதல் புட்னிக் ஏவப்பட்டது. 2. 1957 நவ, 3, புட்னிக் 2இல் முதல் வானவெளி விலங்கு இலய்க்கா அனுப்பப்பட்டது. 3. 1959 ஜூன் 2, திங்கள் நிலாவான உலூனிக்1 உருசியாவால் வெற்றி தரும் வகையில் ஏவப்பட்டது. 4. 1961 ஏப். 12, உருசியா முதன் முதலில் ககாரினை வான வெளிக்கு வாஸ்தோக் கப்பலில் அனுப்பியது. 5. 1963 ஜூன் 16, உருசியா முதல் வீராங்கனை வேலண்டினா தெரஷோவா வாஸ்தோக் 6இல் அனுப்பப்பட்டார். 6. 1965 ஜூன் 3, ஜெமினி 4இல் சென்ற அமெரிக்க எட்வர்டு ஒயிட் கப்பலை விட்டு வெளியேறி முதன்முதலில் வான வெளியில் நடந்தார். 7. 1969 ஜூலை 16, திங்களில் முதன் முதலில் நெயில் ஆம்ஸ்டாங் ஜூலை 21இல் காலடி எடுத்து வைத்தார். 8. 1987 டிச3, உருசியா வான வெளிவீரர் யூரி ரோமனென்கோ 360 நாள் வானவெளிச் சூழ்நிலைத் தாங்காற்றல் பதிவுக் குறிப்பை முறியடித்தார். இக்குறிப்பு உருசிய வானவெளி வீரராலேயே ஏற்படுத்தப்பட்டது. ஆக, 1957 முதல் 1987 வரை 31 ஆண்டுகளில் வான வெளி வரலாற்றில் நடைபெற்ற அருஞ் செயல்கள். இவை. இந்தியா: 1. 1975 ஏப். 19, இந்தியா முதல் செயற்கை நிலா ஆரிய பட்ட உருசியாவிலிருந்து ஏவப்பட்டது. 2. 1981 ஜன 19, இல் இந்திய முதல் செய்தித் தொடர்பு நிலா ஆப்பிள் பிரான்சிலிருந்து விடப்பட்டது. 3. 1981 ஜூலை 24, ரோகினி இந்தியாவிலிருந்து முதன்முதலில் ஏவப்பட்டது. 4. 1984 ஏப்ரல் 3, ரகேஷ் சர்மா முதல் இந்திய வானவெளி வீரரானார். இரு உருசிய வான வெளி வீரர்களுடன் சோயஸ் டி IIஇல் சென்றார். ஆக, 1975 முதல் 2000 வரை 25 ஆண்டுகளில் இந்தியாவின் வானவெளி அருஞ் செயல்கள் இவை. பா. Indian space efforts (ப.து) — space firsts
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 406)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2xwgkc8/

தமிழ்
“வானவெளி முதல் நிகழ்ச்சிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2xwgkc8/
APA
Oliyon Research. (2026). வானவெளி முதல் நிகழ்ச்சிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2xwgkc8/
MLA
"வானவெளி முதல் நிகழ்ச்சிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2xwgkc8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment