சிஎஸ்எம்ஏ/சிடி

ciesemē/ciṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுமப்பி உணர்வு பல்முக அணுக்கம் மோதல் அறிதல் என்று பொருள் படும் Carrier Sense Multiple Access/Collusion Deduction என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு பிணைய நெறிமுறை (Network Protocol). ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற் பட்ட கணுக்களில் (Nodes) கோரிக்கை அனுப்பப்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலையைக் கையாள்வதற்கான நெறி முறை. ஒவ்வொரு கணுவும் பிணையப் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். தடம், போக்குவரத்தின்றி இருக்கும்போது தகவலை அனுப்பும். அதே நேரத்தில் இன்னொரு கணுவும் தகவலை அனுப்பி மோதல் ஏற்படின் இரண்டு கணுவும் தரவு அனுப்புவதை நிறுத்திவிடும். மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு கணுவும் வேறு வேறு கால அளவுகள் காத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின் தரவு அனுப்ப முனையும் — CSMA/CD
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 360)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxecsvg6/

தமிழ்
“சிஎஸ்எம்ஏ/சிடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxecsvg6/
APA
Oliyon Research. (2026). சிஎஸ்எம்ஏ/சிடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxecsvg6/
MLA
"சிஎஸ்எம்ஏ/சிடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxecsvg6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment