சுழற்சியும் கோண உந்தமும்
cuḻaṟciyum kōṇa untamum
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பழங்கொள்கை விசையியல், நியூட்டன் விதிகளின் அடிப்படையில் அமைந்தது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பழங்கொள்கை விசையியல், நியூட்டன் விதிகளின் அடிப்படையில் அமைந்தது. நியூட்டனின் விதிகளுக்கு உட்படும் இயக்கங்களை விவரிப்பதற்கான மேற்கோள் சட்டம், நிலைம மேற்கோள் சட்டம் எனப்படும். நிலைம மேற்கோள் சட்டங்கள் ஒரு நிலை மாற்றக் குழு மூலம் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. இக்குழுவில் மேற்கோள் சட்டத்தை, அதற்கு இணையாகவே இடப் பெயர்ச்சிச் செய்யும் இடம் சார்ந்த நிலை மாற்றங்கள், காலம் சார்ந்த நிலை மாற்றங்கள், சட்டத்தின் திசைப்பாட்டை மாற்றும் சுழற்சிகள், சட்டத்திற்கு ஒரு சீரான திசை வேகத்தை அளிக்கும் விரைவு படுத்தும் நிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும். நியூட்டன் இயற்பியலின் மாறாமை நிலை மாற்றங்கள் அடங்கிய இக்குழு கலிலி குழு எனப்படும். சுழற்சிகள் கலிலி குழுவில் உள்ள ஒரு துணைக் குழு ஆகும்.
நிலைமச் சட்டங்களின் கண்ணோட்டத்திலிருந்து, தன்னிச்சையாகத் தேர்வு செய்யப்பட்ட இரு சட்டங்களுக்கிடையிலான உறவே இன்றியமையாதது. அந்தச் சட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தான திசையில் உள்ள மூன்று அலகு வெக்டார்களாலானவை. அவற்றை (e₁, e₂, e₃), (f₁, f₂, f₃) எனக் குறிப்பிடலாம். (படம்-1) அவற்றுக்கு இடையிலான உறவை f_j = \Sigma_{j} S_{ij} e_j (j = 1,2,3) என எழுதலாம்.
இங்கு S = Fe என்னும் திசைக் கொசைன்கள், ஒரு மெய்யான, ஒழுங்கு முறையான S = (s) என்னும் செங்குத்து அணியின் (orthogonal matrix) கூறுகள் ஆகும். சட்டங்களுக்கிடையிலான நிலை மாற்றம் சட்டச் சுழற்சி எனப்படும். படத்தின் வடிவியலைப் பயன்படுத்தி, ஒவ்வொரு Sஐயும் α, β, γ என்னும் ஆயிலரின் கோண அடிப்படையில் குறிப்பிடலாம். அதற்கு நேரிணையான அணியை S(αβγ) என எழுதலாம். ஆயிலர் கோணங்களின் ஒவ்வொரு கணமும் இவ்வாறு இரண்டு சட்டங்களுக்கிடையிலான தொடர்பைச் சுட்டிக் காட்டும். அதே போல, இரண்டு சட்டங்களுக்கிடையிலான தொடர்பு ஆயிலர் கோணங்களின் ஒரு கணத்தைக் குறிப்பிடும். மேற்காணுமாறு, கலிலியின் குழுவை விவரிக்க இச்சுழற்சித் துணைக் குழுவின் கண்ணோட்டமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
சற்றே வேறுபட்ட ஆனால், தொடர்புள்ள தன்மையில் R என்னும் சுழற்சியை, அது r என்னும் தன்னிச்சையான வெக்டாரின் மேல் செயல்படுவதைக் குறிப்பிட்டு விவரிக்கலாம் (படம்-2). ஒவ்வொரு சுழற்சிக்கும் புற வெளியிலான n என்னும் அலகு வெக்டார் திசையும், φ என்னும் கோணமும் உண்டு. இது R,n ஐப் பொறுத்த அளவிலான சுழற்சி எனப்படுகிறது. R, r ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு பின்வருமாறு:
R,= Cosφ + (nX)Sinφ + n(n.)(1-Cosφ) (1)
n என்னும் ஒவ்வோர் அலகு வெக்டாரும், φ என்னும் ஒவ்வொரு கோணமும், R என்னும் ஒரு சுழற்சியை வரையறுக்கின்றன. அது தனித் தன்மையுடன் இருக்க வேண்டிய தேவையில்லை. பல சமயங்களில் Rக்குப் பதிலாக R(n, φ) என எழுதலாம்.
ஒரு சுழற்சியின் இந்த இரண்டாம் விவரிப்பில் (e₁, e₂, e₃) சட்டத்திலிருந்து f = R(αβγ)e, (i=1,2,3) என்னும் சுழற்சியின் மூலம் (f₁, f₂, f₃) சட்டத்தைப் பெறலாம், இங்கு R(αβγ) என்பது பின் வருமாறு அமைந்த மூன்று சுழற்சிகளின் ஒரு வரிசையாகும்.
இங்கு b = Sin αe₁ + Cosαe₂
c = Cosα Sinβe₁ + Sinα Sinβe₂ + Cosβe₃.
அப்போது S(αβγ) என்னும் அணிக்கும், R(αβγ) என்னும் சுழற்சிக்கும் உள்ள தொடர்பு பின் வருமாறு: சுழற்சிக்கான மாறாமைக்கும், கோண உந்தத்தின் அழியாமைக்கும் இடையிலுள்ள தொடர்பு. அழுத்தங்களிலிருந்து (potentials) பெறக் கூடிய விசைகளை வரையறை செய்து விடும் லாக்ராஞ்சின் சமன்பாடுகளிலிருந்து பெறக் கூடிய நியூட்டன் அமைப்புகளை மட்டும் கவனத்தில் கொண்டால், மாறாமை நிலை மாற்றங்களுக்கும், அழியாமை விதிகளுக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். இந்த உறவை ஜாகோபி முதலில் கண்டு பிடித்தார். ஆனால், இன்று அதைப் பொதுவாக நோதர் தேற்றம் எனக் குறிக்கின்றனர். இதை, காலம் சார்ந்த இடப் பெயர்ச்சிகளுக்கு லாக்ராஞ்சின் சமன்பாடுகள் மாறாமைத் தன்மையுடையவையாக இருந்தால், ஆற்றல் அழியாது எனத் தெளிவுபடுத்தலாம், இடம் சார்ந்த இடப் பெயர்ச்சிகளுக்கு லாக்ராஞ்சின் சமன்பாடுகள் மாறாமைத் தன்மையுடையவையாக இருந்- தால், உந்தம் அழியாது. இறுதியாக, சுழற்சிகளுக்கு லாக்ராஞ்சின் சமன்பாடுகள் மாறாமையுடையவை ஆக இருப்பின், கோண உந்தம் அழியாது. மேலும் அழியாமல் இருக்க வேண்டிய அளவுகள், இதே மாறாமைகளாலேயே வரையறுக்கப்படுகின்றன. அழியாமை லிதிகளுக்கும், மாறாமைகளுக்கும் இடையிலுள்ள இச்சிறந்த தொடர்பு நியூட்டன் சமன்பாடுகளுக்குப் பொருந்தாது, இருப்பிட ஆயங்கள் பங்கேற்கும் அழுத்தங்களிலிருந்து விசைகளைப் பெறலாம் என்றோ, மைய விசைகள் இருக்கும் என்றோ கற்பித்துக் கொண்டாலன்றிச் சுழல் தன்மையில் மாறாமை கொண்ட சமன்பாடுகளுக்கும் கோண உந்தம் அழியாதிருக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை.
சார்பியலின் சிறப்புக் கொள்கையை அறிமுகப் படுத்தும் போது, ஐன்ஸ்டீன், மாறாமை நிலை மாற்றங்களின் குழுவைக் கலிலி குழுவிலிருந்து ப்வாங்காரே குழு என்னும் சீரற்ற லாரன்ட்ஸ் குழுவாக மாற்ற வேண்டியுள்ளமையைக் கண்டார். லாக்ராஞ்சின் சமன்பாடுகள் சரியானவையே என்னும் செயல் தத்துவத்தைக் கற்பித்துக் கொண்டால், மீண்டும் அழியாமை விதிகளையும், நேர் போக்கு உந்தம், ஆற்றல், கோண உந்தம் ஆகிய அழியாத அளவுகளையும் அளிக்கும் நோதர் தேற்றம் சரியாக இருப்பதைக் காணலாம். வேறான ஒரு மாறாமைக் குழு தொடர்புற்றிருந்தால், இந்த அழியாத அளவுகள் நியூட்டன் அல்லது கலிலியோவின் அழியாத அளவுகளிலிருந்து மாறுபட்டவையாகக் காணப்படுகின்றன.
நிலைமமில்லாத சட்டங்கள், மைய விலக்கு விசை, கோரியாலிஸ் விசை. (e₁, e₂, e₃) என்பது ஒரு நிலைமச் சட்டமாகவும், R(t) என்பது காலம் சார்ந்த சுழற்சியாகவும் இருந்தால், f = R(t)e, (i= 1, 2, 3) என்னும் சட்டம் நிலைமமில்லாத சட்டம் எனப்படும். இத்தகைய ஒரு சட்டத்தின் செயல்படும் விதிகளை மூல நிலைமச் சட்டத்தில் நியூட்டன் விதிகளை நிலை மாற்றம் செய்து கண்டு பிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக α, β ஆகிய ஆயிலர் கோணங்கள் காலத்தால் மாறாதவையாகவும், ஆனால் γ=ωt எனக் காலத்திற்கு நேர் விகிதத்தில் மாறுவனவாகவும், கற்பித்துக் கொண்டால் நியூட்டன் விதிகள் மைய விலக்கு விசை, கோரியாலிஸ் விசை ஆகியவை தோன்றுவதால், மாற்றியமைக்கப்படுகின்றன. சுழலும் சட்டத்தில் r என்னும் நிலையில் உள்ள m என்னும் துகளின் மேல் செயல்படும் F விசைகள், நிலைமச் சட்டத்திலுள்ள F விசைகளுடன் கோரியாலிஸ் விசைகளையும் மைய விலக்கு விசைகளையும் கூட்டுவதால் கிடைக்கின்றன.
= - 2m( X - m X X ) இதில்
= R(α, β, ωt)e₃
f சட்டம் சார்பிலா யூக்ளிட் வெளியைப் (Euclidean space) பொறுத்துச் சுழலுவதால், இக் கூடுதலான விசைகள் தோன்றுகின்றன. நியூட்டன் விசையியலில் இந்தச் சார்பிலா வெளி, பங்கு பெறுவதை மாக் முதலான பல அறிவியலார் ஏற்றுக் கொள்ளவில்லை. சார்பிலா வெளியைப் பொறுத்த சுழற்சி என்னும் கருத்துக்குப் பதிலாகத் தொலைவான விண்மீன்களைப் பொறுத்த சுழற்சி என்று வைத்துக் கொள்ளலாம் என அவர்கள் வாதிட்டனர். சார்பியல் கொள்கையின் சிறப்புக் கொள்கையோ, பொதுக் கொள்கையோ இந்த எதிர்ப்புகளுக்கு விளக்கமளிக்கவில்லை. சார்பியலின் பொதுக் கொள்கையில், கால—வெளி என்பது அதிலுள்ள நிறைகளின் தாக்கத்திற்குள்ளாகும் பொருளாகி விட்டது. ஆனால் கால—வெளி அதிலுள்ள பொருள்களின் மேல் மீண்டும் ஒரு தாக்கத்தைச் செலுத்துகிறது. இந்தக் கால—வெளியைப் பொறுத்தும் சுழலுகிற ஒரு தல (local) மேற்கோள் சட்டத்தை அறிவது பொருளுடைய தாகவே இருக்கும். .இவ்வாறு பொதுச் சார்பியலில் கால—வெளி இன்னும் சார்பிலாததாகவே உள்ளது. இதுவும், மேற்கூறிய கருத்து வேற்றுமைகளுக்கு விளக்கம் அளிப்பதில்லை.
மைய விசைகளுக்குக் கோண உந்த அழியாமை. ஒரு சிறப்பு நிலையில், முதிரா நிலை ஆக்கக் கூறுகள் புள்ளி நிறைகளாகவும், அவற்றுக்கிடையிலான விசைகள் இரட்டைத் தன்மையில் சமமாகவும், எதிர் எதிரானவையாகவும் இருக்க, அந்த விசைகள் ஒவ்வோர் இரட்டையிலும் நிறை புள்ளிகளை இணைக்கிற கோட்டின் ஊடாகச் செயல்படலாம். இத்தகைய ஒரு சிறப்பு நிலைக்கான நியூட்டன் விதிகளைக் காணலாம். i என்னும் துகளின் நேர் போக்கு உந்தம் பின் வரும் வெக்டாரினால் தரப்படுகிறது.
இத்தகைய N துகள்கள் அடங்கிய ஒரு தனிமைப் படுத்தப்பட்ட அமைப்பிற்கு, i என்னும் துகளின் மேல் செயல்படும் விசை,
இந்த விசை விதியைப் பின் வருமாறு விவரிக்கலாம். காலத்தில் dt என்னும் மிக நுண்ணிய அதிகரிப்பு ஏற்படும் போதெல்லாம், i,j ஆகிய துகள் இரட்டைகளுக்கு இடையில் ஒரு மிக நுண்ணிய அளவில் நேர் போக்கு உந்தம் பரிமாறிக் கொள்ளப் படுகிறது. i துகளுக்கு dt என்னும் நேர் போக்கு உந்தம் கிடைக்கிறது. j துகளுக்கு dt dt=- dt என்னும் நேர் போக்கு உந்தம் கிடைக்கிறது. இவ்வாறு மொத்த நேர் போக்கு உந்தம் அழியாமல் காக்கப் படுகிறது என்பது தெளிவு. ஏனெனில், அமைப்பிலுள்ள துகள்களுக்கு இடையில் நேர் போக்கு உந்தம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. நிலைமைச் சட்டத்தின் தொடக்கப் புள்ளியைப் பொறுத்த i துகளின் கோண உந்தம் I= x X m. N துகள்கள் அடங்கிய ஒரு தனிமைப் படுத்தப்பட்ட அமைப்பில், மொத்தக் கோண உந்தமும் அழிவதில்லை என முடிவு செய்யக் கூடும். dt என்னும் நேரத்தில் dt என்னும் அளவுள்ள நேர் போக்கு உந்தம், துகளை விட்டு நீங்கி, j துகளை அடைகிறது. dt என்னும் நேரத்தில் X dt என்னும் அளவுள்ள கோண உந்தம் i துகளை விட்டு நீங்கி,j துகளை அடைகிறது. F என்பது (x — x)க்கு இணையாக உள்ளமையால், x X dtf(x — x) என்னும் கோண உந்தம் i துகளை விட்டு நீங்குகிறது எனவும், x X dtf(x — x) (Xi-xj) என்னும் கோண உந்தம் j துகளை வந்து அடைகிறது எனவும் கூறலாம்.
இந்த அளவுகளுக்கிடையில் உள்ள வேறுபாடு, அதாவது எதுவும் இழக்கப்படுவதில்லை. மொத்தக் கோண உந்தத்திற்கான ஓர் அழியாமை விதி கிடைக்கிறது.
திண்மப் பொருள்களின் சுழற்சி. O என்னும் நிலையான புள்ளியை உடைய ஒரு திண்மப் பொருளின் சுழற்சியை, ஒரு சுழலும் சட்டத்தின் உதவியுடன் விவரிக்கலாம். அச்சுழலும் சட்டம் f = R(φ,n)e (i=1,2,3) என இருக்கும். இங்கு (e₁, e₂, e₃) என்பது ஒரு நிலைமச் சட்டம். φ,n ஆகியவை காலத்தின் சார்பெண்கள்; இங்கு, சட்டத்தைத் திண்மப் பொருளிலேயே பொருத்தி விடலாம். கோணத் திசை வேகம் = Σ X f. அதற்கும், சட்டத்தின் இயக்கத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு பின்வருமாறு:
எனவே,
φ என்னும் கோணத்தையும், n = e.n என்னும் ஆக்கக் கூறுகளையும் பொறுத்து
என்னும் கோண உந்தத்தையும், T என்னும் இயக்க ஆற்றலையும், நிலைம பண்பனான (tensor) I-இன் உதவியுடன் எழுதி விடலாம்.
இதில் I என்பது f அச்சைப் பொறுத்த நிலைமத் திருப்புந் திறன். -I என்பது f.f ஆகிய அச்சுகளுக்கான நிலைமத்தின் பெருக்குத். தொகை.
குவாண்டம் கொள்கை. பழங்கொள்கையான நியூட்டன் விசையியலில் இருப்பதை விடக் குவாண்டம் எந்திரவியலில் சுழற்சி மாறாமை, கோண உந்தம், அழியாமை ஆகியவை மிகப் பெரும் முக்கியத்துவம் கொண்ட கருத்துகள் ஆகும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாகப் போர் குவாண்டமாக்கலே ஓடு பாதைக் கோண உந்தத்தின் குவாண்டமாக்கல் ஆகும். பிளாங்கின் மாறிலி h கோண உந்தத்தினுடைய பரிமாணச் சமன்பாட்டையே பெற்றுள்ளது. இக்கட்டமைப்பு, குவாண்டம் எந்திரவியலின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
குவாண்டம் எந்திரவியலுக்கு மேற்பொருத்தல் கருதுகோளின் காரணமாக, அனுமதிக்கப்பட்ட நிலைகளின் கணம் ஹில்பர்ட் வெளியின் (Hilbert space) ஒரு நேர் போக்குக் கட்டமைப்புக் கொண்டதாயிருக்கிறது என்பதே ஆழ்ந்த காரணமாகும். பழங்கொள்கையில் சுழற்சி மாறாமையிலிருந்து, அமைப்பின் ஒவ்வொரு நிலைக்கும் அத்தகைய பண்புகள் உள்ள ஒரு சுழற்றப்பட்ட நிலை உள்ளது என்னும் உண்மை கிடைத்தது. ஒரு நிலைச் சுழற்சிகளுக்கு மாறாத் தன்மை கொண்டிருந்தாலேயன்றி, ஒவ்வொரு சுழற்சியும், ஒரு புதிய நிலைக்கு வழி வகுக்கும். இவ்வாறு, ஒரே வகைப் பண்புள்ள எண்ணற்ற நிலைகள் உள்ளன. அவ்வாறே, குவாண்டம் கொள்கையில் ஒவ்வொரு சுழற்சியும் ஒரு புதிய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இங்கும் எண்ணற்ற புதிய நிலைகள் உண்டாகின்றன. ஆனால், இந்நிலைகள் ஒரு நேர் போக்குப் பல கூறினமாகவே (manifold) அமைகின்றன. இந்த அனுமதிக்கப்பட்ட நிலைகளின் எண்ணிலியை, நேரடியாக அடிப்படை நிலைகளைப் பொறுத்துக் குறிப்பிடலாம். இந்த அடிப்படை நிலைகள், நிலைகளின் ஒரு மிகச் சிறிய உட்கணமர்க, பல சமயங்களில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுடன் இருக்கலாம். குவாண்டம் எந்திரவியலில் குழுக்களின் நேர் போக்குக் குறிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்துவதற்கு இக்கட்டமைப்பு வழி செய்கிறது.
குவாண்டம் கோண உந்தம். குவாண்டம் இயற்பியலிலும், சமச் சீர்மைக்கும், அழியாமை விதிகளுக்கும்
இடையிலுள்ள தொடர்பு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. ஏனெனில், குவாண்டம் எந்திர வியல் ஹாமில்டோனியன் மற்றும் லாக்ராஞ்சின் சமன்பாடுகளை அடிப்படையாகக்க் கொண்டது. குவாண்டம் இயற்பியலில் ஓல்வொரு பழங்கொள்கைப் படியான காணும் அளவுக்கும் (observable) ஒரு ஹெர்மிசியன் செயலியைச் சேர்த்துப் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, உந்தம் -i \hbar \nabla என்னும் செயலியுடன் சேர்த்துப் பார்க்கப்படுகிறது. இங்கு i = \sqrt{-l}, \hbar = h/2\pi \cdot \nabla என்பது சரிவு செயலி (gradient operator) ஆகும்.
\overline L = m \left( \overline r \times \overline v \right) = \overline r \times p என்னும் சமன்பாட்டிலுள்ள கோண உந்தத்துடன் சேர்த்துப் பார்க்கும் குவாண்டம் இயற்பியல் செயலி பின்வருமாறு: \begin{alignat}{3}L_x = -i\hbar \left( y \frac{\partial}{\partial z} - z \frac{\partial}{\partial y} \right) \\ L_y = -i\hbar \left( z \frac{\partial}{\partial x} - x \frac{\partial}{\partial z} \right) \\ L_z = -i\hbar \left( x \frac{\partial}{\partial y} - y \frac{\partial}{\partial x} \right) \end{alignat}
\overline L என்னும் வெக்டர் செயலி ஓடு பாதைக் கோண உந்தச் செயலி எனப்படும்.
\overline L \times \overline L = i \hbar \overline L என்பது கோண உந்தப் பரிமாற்ற விதி எனப் படுகிறது. இவ்விதியை நிறைவு செய்கிற மிகப் பொதுவான ஹெர்மிசியன் செயலி \overline J, மொத்தக் குவாண்டம் கோண உந்தம் என வரையறுக்கப்படும். \overline J \times \overline J = i\hbar \overline J, பொதுவாக ஓர் ஒற்றைத் துகளுக்கு, \overline J = \overline L + \overline S . இங்கு \overline L என்பது ஓடு பாதைக் கோண உந்தச் செயலி. \overline S என்பது துகளின் உள்ளார்ந்த அல்லது தற்சுழற்சிக் கோண உந்தத்துடன் தொடர்பு கொண்ட ஒரு செயலி. பழங் கொள்கையில் இதற்கு நேரிடையாக எதுவும் இல்லை. தற்சுழற்சிக் கோண உந்தம் \overline S, துகளின் உள்ளார்ந்த பண்பாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஆயச் சட்டத்தின் தொடக்கப் புள்ளியைப் பொறுத்து அமைவதில்லை. —கே. என். ராமச்சந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 577)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxb3jzna/
தமிழ்“சுழற்சியும் கோண உந்தமும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cxb3jzna/APA
Oliyon Research. (2026). சுழற்சியும் கோண உந்தமும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxb3jzna/MLA
"சுழற்சியும் கோண உந்தமும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cxb3jzna/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment