உயிரொலி இயைபு என்பது ஒருவகை முன்னோக்கு ஓரின ஒலித்திரிபு (Progressive Assimilation) ஆகும். ஒரு சொல்லின் இறுதியிலுள்ள உயிரொலி அந்தச் சொல்லோடு வந்து சேர்கிற மற்றொரு சொல் அல்லது விகுதியிலுள்ள உயிரொலியைத் தன்னினத்தைச் சேர்ந்த உயிரொலியாகத் திரிபடையச் செய்தலுக்கு உயிரொலி இயைபு என்று பெயர். உயிரொலி இயைபு (Vowel Harmony) திராவிட மொழிகளில் தெலுங்கு மொழியிலேயே தெளிவாகவும் ஒழுங்காகவும் காணப்படுகிறது. எ-டு Katti+Ku ‘Knife + to’ → Kattiki, பொதுவாகப் பகுதியிற் காணப்படும் உயிரொலிகளே அடுத்துவரும் விகுதிகளிற் காணப்படும் உயிரொலிகளைத் தம்மின ஒலிகளாக மாற்றும். ஆனால், விகுதிகளிற் காணப்படும் உயிரொலிகளும் அருகிற் காணப்படும் உயிரொலிகளைத் தம்மினப்படுத்தலும் தெலுங்கு மொழியிற் காணப்படுகிறது. எ–டு Katti + lu ‘Knife+Plural’ → Kattulu. துளு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளிலும் உயிரொலி இயைபு காணப்படுகிறது. தமிழில் பேச்சு வழக்கில் மட்டுமே உயிரொலி இயைபு காணப்படுகிறது. எ–டு நடுங்கு + இ → நடிங்கி; ஒதுங்கு + இ→ஒதிங்கி. பின்னிசு (Finnish), துருக்கி (Turkish) போன்ற சித்திய மொழிகளிலும் உயிரொலி இயைபு காணப்படுகிறது. பின்னிசு மொழியில் உயிரொலி இயைபு: ::{| துருக்கி மொழியில் உயிரொலி இயைபு: ::{| கிரீக்கு, இலத்தீன், அயிரிசு போன்ற இந்தோ–ஐரோப்பிய மொழிகளிலும் உயிரொலி இயைபு காணப்படுகின்றது. அ.கா.