இருபத்தேழு நாள் மீன்களுள் இருபத்தாறாவது ஆகும். இது சனிக்குரிய மூன்று நாள்மீன்களுள் ஒன்று. இது மீன இராசியில் 3 பாகை 20 கலை முதல் 16 பாகை 40 கலை வரை அமைந்துள்ளது. பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய இரண்டு மீன்களும் ஒரு கட்டிலின் நான்கு கால்கள் போல அமைந்துள்ளன. எனவே உத்திரட்டாதி ஒரு கட்டிலின் இருகால் போல் அமைந்துள்ளது. உத்திரட்டாதிக்கு முரசு, பிற்கொழுங்கால் அறிவன், நால் மன்னன், நிலம் ஆகிய பெயர்கள் உண்டு. உத்திரட்டாதியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒரு குழந்தைக்குரிய திசை சனி திசை நிகழும். ப.ரா.க.