சுழல்வு திண்மம் ஒரு சமதள வளை வரை y = f(x) இன் மேல் A,B என்னும் இரு புள்ளிகளிலிருந்து X அச்சுக்கு AC, BD என்பவை செங்குத்துக் கோடுகள் ஆகும். ABDC என்னும் பரப்பை X அச்சைச் சுற்றிச் சுழற்றினால், ஒரு சுழல்வு திண்மம் (solid of revolution) கிடைக்கிறது. பொதுவாக, ஒரு வளை வரையை ஒரு கோட்டைப் பொறுத்து சுழற்றினால், ஒரு கழல்வு மேற்பரப்பு (surface of revolution) கிடைக்கும். தொடுத்த தள பரப்பை (connected plane region) அத்தளத்தில் அமைந்த ஒரு நேர்கோட்டை ஒட்டி 360° சுழற்றும் போது, சுழல்வு திண்மம் உருவாகிறது, கன வடிவக் கணிதத்தில், உருளை, கூம்பு உருளை ஆகிய வடிவங்களைச் சுழல்வு திண்மங்களாகப் பெறுதல் இயலும். எந்தக் கோட்டை ஒட்டிய சுழற்சியால் திண்மம் கிடைக்கிறதோ, அக்கோடு சுழல்வு அச்சு (axis Of revolution) எனப்படும். சுழல்வு திண்மங்களை அச்சுக்குச் செங்குத்தாக ஒரு தளத்தால் வெட்டினால், வட்டப் பரப்பு கிடைக்கும். வெட்டும் தளத்தைப் பொறுத்து, வட்ட ஆரை வேறுபடும்., சுழல்வு திண்மத்தை, மாறும் பல்வேறு ஆரைகளை உடைய வட்டப் பரப்புகளின் அடுக்காகவும் உருவகம் செய்யலாம். x₀ லிருந்து x₀ + Δx வரை, y= f(x), x அச்சை அடைக்கும் பரப்பை, x அச்சை சுற்றிச் சுழல்வதால் உண்டான திண்மத்தின் பருமம் —கோ. சண்முகசுந்தரம்