சிறந்த அமெரிக்க நடிகராகவும் இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். இராபிசன் அமெரிக்க நீக்கிரோக்களுள் முதன் முதலில் புகழ்பெற்று விளங்கிய கலைஞர். 1930–ஆம் ஆண்டு பால் இராபிசன் (Paul Robeson) ஆங்கிலக் கவிஞர் சேக்சுபியரின் ‘ஒத்தெல்லோ’ என்னும் நாடகத்தில் ஒத்தெல்லோ வேடம் ஏற்று நடித்- துப் புகழ்பெற்றார். இவர் சிறந்த இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். அலங்காரப் படகு (Show Boat) என்னும் திரைப்படத்தில் இவர் பாடிய ‘பழம்பெரும் நதி’ (Ol‘Man River) என்னும் பாடல் அழியாப் புகழ்பெற்றது. இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார். இவர் 1952–ஆம் ஆண்டு இசுடாலின் அமைதிப்பரிசைப் (Stalin Peace Prize) பெற்றார்.