அச்சுதன் என்பது அழிவில்லாதவன் என்னும் பொருளில் இறைவனைக் குறிக்கும். திருமாலின் பன்னிரு திருநாமங்களுள் அச்சுதன் என்பதும் ஒன்றாகும். அச்சுதன் என்னும் பெயர் திருமாலையும் சிவனையும் சண்முக சேனா வீரனையும் குறிக்கும். சங்க காலத்தில் அச்சுதனார் என முடியும் பெயர் கொண்ட புலவர் சிலர் வாழ்ந்தனர். அவருள் நல்லச்சுதனார் என்பவர் ஒருவர். இவர் பெயரில் வரும் ‘நல்’ சிறப்பு அடையாகும். அச்சுதனார் எனப் பிறிதொரு புலவரும் அக்காலத்தில் வாழ்ந்தார். இவர் பரிபாடல் சிலவற்றிற்கு இசையமைத்துள்ளார்.