கடிகாரங்கள்
kaṭikāraṅkaḷ
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் நேரத்தை அறிந்து கொள்ள நிழலின் அளவை அளவு கோலாகக் கொண்டனர்.
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் நேரத்தை அறிந்து கொள்ள நிழலின் அளவை அளவு கோலாகக் கொண்டனர். கிழக்கே நிழல் நீண்டிருந்தால் காலை நேரம் என்றும் மேற்கே நீண்டிருந்தால் மாலை
நேரம் என்றும் அறிந்தார்கள். நிழல் குறுகலாக இருந்தால் நண்பகல் என்று கொண்டார்கள். இவ்வாறு நிழலைக் கொண்டு நேரம் அறிவது பகற்பொழுதில் மட்டுமே இயன்றது.
சூரிய ஒளி குறைந்த, மேகமூட்டம் நிறைந்த நாட்களிலும் இரவுக் காலத்திலும் நேரத்தை அறிய நீர்க்கடிகாரத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, ஒரு சிறு துளை வழியாக நீரைச் சொட்டச் செய்வார்கள். சொட்டிய நீரின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டறிவார்கள். நீருக்குப் பதிலாக மனலைப் பயன்படுத்துவதும் உண்டு.
மணல்கடிகாரப் பாத்திரத்தின் மேற்பகுதியும் கீழ்ப் பகுதியும் அகன்ற கின்னங் கொண்டிருக்கும். இரண்டுக்கும் இடையே ஒடுக்கமான பாதைஇருக்கும். அதன் வழியே மணல் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்ப்பகுதிக் கிண்ணத் தில்விழும். விழுந்துள்ள மணலின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டறிவார்கள். கீழ்ப்பகுதிக் கிண்ணத்தில் மணல் முழுமையும் கொட்டிய பின்னர் தலைகீழாக திருப்பி வைத்து மீண்டும் மணலை விழச் செய்து நேரம் அறிவார்கள். இம்முறை நீண்ட காலமாக இந்தியா, எகிப்து. சீனா, ரோம, கிரேக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மெழுகுவர்த்தியை எரியச் செய்து அதன் உருகிய பகுதியைக் கணக்கிட்டு நேரம் அறியும் முறையும் இருந்து வந்தது.
இன்றுள்ள இயந்திர நுட்பத்தோடு கூடிய முதல் கடிகாரத்தை ஹென்றி டி விக் என்பவர் 1800ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இன்றைய நவீன கடிகாரங்களுக்கு முன்னோடியான
இக்கடிகாரத்தினுள் பற்சக்கரமும் முகப்பில் நேரங்காட்டும் முள்ளும் (Dial)இருந்தன. அதன்பின் நானூறு ஆண்டுகள் கழித்து 1700 இல் ஊசலோடு கூடிய (Pendulam) நிமிட முள் கொண்ட புதுமுறை கடிகாரமாக அது மாற்றியமைக்கப்பட்டது. இதன்பிறகு இன்று வரை எண்ணற்ற வடிவங்களில் சுவர்க்கடிகாரங்களும் கைக்கடிகாரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கையில் கட்டும் கடிகாரங்கள் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்பே உருவாக்கப்பட்டுள்ளன.
கடிகாரத் தொழில் இன்று மிக நவீனமானதாக, வளமாக வளர்ந்துள்ளது. நிமிட விநாடிகளைக் காட்டுவதோடு தேதியையும் கிழமைகளின் பெயர்களையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. பேட்டரியால் இயங்குவதோடு இரவில் பளிச்சென்று நேரங்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுவர்க் கடிகாரங்களில் அலாரம் அடிப்பது போன்று கைக்கடி காரங்களிலும் அலாரம் அடிக்கும் வசதிகள் செய்யபட்டுள்ளன.
ஓட்டப்பந்தயத்தில் துல்லியமாக விநாடிகளைக் கணக்கிட்டறிய நிறுத்து கடிகாரங்கள் (Stop watch) புழக்கத்தில் உள்ளன. கண்ணுக்குக் கவர்ச்சியூட்டும் வகையில் புதிய புதிய வண்ணங்களில், வடிவங்களில் கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 118)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cftx4phr/
தமிழ்“கடிகாரங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cftx4phr/APA
Oliyon Research. (2026). கடிகாரங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cftx4phr/MLA
"கடிகாரங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cftx4phr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment