அகத்தியர் தேவாரத் திரட்டு

akattiyar tēvārat tiraṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது அகத்திய முனிவரால் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவர் பாடிய தேவாரங்களினின்றும் சிவாலய முனிவர் பொருட்டுத் திரட்டிக் கொடுக்கப்பட்ட நூல். இத்திரட்டினுள் 25 பதிகங்கள் உள்ளன. அப்பதிகங்கள் குருவருள், பரையின் (திருநீற்றின்) வரலாறு; அஞ்செழுத்து உண்மை, கோயில் திறம், சிவனுருவம், திருவடி, அருச்சனை, அடிமை என எட்டுப் பிரிவினைக் கொண்டு திகழ்வன. இதில் சம்பந்தர் பதிகம் 10, அப்பர் பதிகம் 8, சுந்தரர் பதிகம் 7 உள்ளன. அகத்தியர் இருந்த காலத்திற்கும் மூவர் முதலிகள் இருந்த காலத்திற்கும் எத்தனையோ நூற்றாண்டு இடைவெளிகள் இருப்பினும் தேவாரப் பதிகங்களுள் சிலவற்றைத் தொகுத்து அகத்தியர் தேவாரத் திரட்டு என்று கூறப்பட்டு வருதலின் குறிப்பு, அகத்தியர் என்ற பெயருடன் தேவார காலத்துக்குப் பின் இருந்த ஒருவரால் திரட்டப்பட்டுக் கொடுத்திருக்க வேண்டுமெனக் கொள்ளல் வேண்டும். அகத்தியர் சித்தர் ஆதலின் பன்னெடுங் காலம் வாழ்ந்த காரணத்தால் இங்ஙனம் திரட்டிக் கொடுத்தார் என்று கூறினும் அமையும். காலம் குறிப்பிடற்கில்லை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cedxzqhr/

தமிழ்
“அகத்தியர் தேவாரத் திரட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cedxzqhr/
APA
Oliyon Research. (2026). அகத்தியர் தேவாரத் திரட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cedxzqhr/
MLA
"அகத்தியர் தேவாரத் திரட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cedxzqhr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment